வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (28/12/2015)

கடைசி தொடர்பு:13:15 (28/12/2015)

செல்வராகவன் தனுஷ் படம் என்னவானது?

சிம்பு நடித்த கான் படத்தைப் பாதியில் நிறுத்தினார் செல்வராகவன். அப்போது தனுஷை வைத்து ஒருபடத்தை இயக்குவதற்காகவே இந்தப்படத்தை நிறுத்தினார் என்று சொல்லப்பட்டது. அதற்கான பேச்சுகளும் நடந்துகொண்டிருந்தன.

இப்போது அவர் எஸ்.ஜே.சூர்யாவை கதாநாயகனாக வைத்து ஒரு பேய்ப்படத்தை இயக்கப்போகிறார் என்று சொல்லப்படுகிறது. அந்தப்படத்தை இயக்குநர் கௌதம்மேனன் தயாரிக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் சுமுகமாகப் போய்க்கொண்டிருப்பதாகவும் நிச்சயம் இது நடக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

அப்படியானால் தனுஷ் செல்வராகவன் இணைவதாகச் சொன்னபடம் என்னவாயிற்று? துரைசெந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் கொடி படத்தின் படப்பிடிப்பு நவம்பரில் தொடங்குவதாக இருந்தது. சில காரணங்களால் அது கொஞ்சம் கொஞ்சமாகத் தள்ளிப்போய் ஜனவரி முதல்வாரத்தில் தொடங்குவதாகச் சொல்கிறார்கள். பல்வேறு காரணங்களால் இரண்டுமாதங்கள் படப்பிடிப்பு தள்ளிப்போனதால் தனுஷின் அடுத்தடுத்த திட்டங்களிலும் மாற்றம் ஏற்பட்டுவிட்டதாம்.

அவருடைய வேலைகளை முடித்துவிட்டு வருவதற்குள் எஸ்.ஜே.சூர்யாவை வைத்து இந்தப்படத்தை எடுத்துவிடலாம் என்று செல்வராகவன் திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. செல்வராகவன் ஒரு படத்தைத் தொடங்கினால் பல மாதங்கள் அல்லது வருடக்கணக்கில் படப்பிடிப்பு நடக்கும், இந்தப்படம் அப்படியில்லாமல் விரைவில் முடிந்துவிடும் என்றும் சொல்கிறார்கள்.  
 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்