2015 வருடத்தின் தெறி ஹிட் 15 பாடல்கள்

இந்த வருட தமிழ் சினிமாவில் திரைப்படங்களின் ட்ரெய்லர் மற்றும் டீசர்கள் மட்டுமல்லாது பாடல்களும் வைரல் களத்தில் இறங்கியது. சிறந்த பாடல் என்பதையும் தாண்டி யு ட்யூப் வியூவ்ஸ், ஃபேஸ்புக் ஷேர்ஸ், ஆக்டிவ் நெட்டிசன்களின் ரிவ்யூ என பல இத்யாதிகளே ஒரு பாடலின் வெற்றியை முடிவு செய்தன. அப்படி 2015ம் வருடம் வைரல் ஹிட் லிஸ்ட்டில் வரும் முக்கியமான 15 பாடல்கள் இங்கே..

மெர்சலாயிட்டேன்: (படம்- ஐ)

இந்த வருட தமிழ் சினிமாவின் முதல் வைரல் மெர்சலாயிட்டேன் சாங் ப்ரோமோ. ’ஐ’ படத்தில் ரஹ்மான் இசையில் அனிருத் பாடியதென்பது வேற லெவல் எதிர்பார்ப்பைக் கிளப்ப தியேட்டரில் பாட்டின் விஷுவல்ஸை பார்த்தவுடன் நம் அனைவரின் கண்களிலும் இதயம் பூத்து குலுங்கியது.  கபிலனின் சென்னைத் தமிழ் வரிகளும் ரஹ்மானின் இசையும் காட்டிய மெர்சலில் இந்த வருடத்தின் முதல் ஹிட் ஆனது மெர்சலாயிட்டேன். இப்பாடலின் க்ராஃபிக்சுக்கு மட்டும் 3 கோடி செலவானதென்பது ‘அதுக்கும் மேல’ மெர்சல்.

பாடலின் லிங்க்:


 

பழகிக்கலாம்: (படம்-ஆம்பள)


பழகிக்கலாம் பாடல் மூலம் இந்த வருடம் நம்முடன் இசையமைப்பாளராய் பழக வந்தார் அதற்குமுன் பாடகராய் நமக்கு பழக்கமான ’ஹிப்ஹாப் தமிழா’ ஆதி. எதிர்நீச்சல் போடுவதையும், பக்கம் வந்து முத்தங்கள் தரச்சொல்லி கேட்பதையும் பாடியிருந்த ஆதி 2015ல் நம்முடன் பழகிக்க பெயரையும் நம்பரையும் கேட்டு இசையமைப்பாளராய் அப்கிரேடினார். தன்னுடைய முதல் சினிமா பாடலை தானே எழுதி இசையமைத்து பாடி தனி ‘ஆம்பள’யா ஹிட் கொடுத்து இந்த வருடத்தை துவக்கினார் ஹிப்ஹாப் தமிழர். 

பாடலின் லிங்க்:


அன்பே அன்பே: (படம்- டார்லிங்)

எல்லா வருடமும் போல இந்த வருடமும் ஹிட் லிஸ்ட்டில் உள்ளார் ஜி.வி. பிரகாஷ் குமார். இந்த வருடம் டார்லிங்(க்)காக. அதுவரை ஜி.வி பாடியதை மட்டுமே கேட்ட நாம் டார்லிங்கில் ஜி.வி பாடுவதை திரையில் பார்த்தோம். யார் இந்த சாலை ஓரம், யாரோ இவன் என காதலில் கரைந்த ஜி.வி ‘அன்பே அன்பே’ என கலங்கியது சூப் பாய்சுக்கு 2015ன் ‘எங்கிருந்தாலும் வாழ்க’ வெர்ஷன் ஆனது. நா. முத்துக்குமார் வரிகளுக்கு இசையமைத்து பாடி தன்னுடைய பங்காக இந்த வருடத்தின் காதல் தோல்வி ஹிட் கொடுத்து தம்ஸ் அப் வாங்குகிறார் மியூசிகல் ஹீரோ.

பாடலின் லிங்க்:

 

உனக்கென்ன வேணும் சொல்லு: (படம்- என்னை அறிந்தால்)

ஹாரிஸ் ஜெயராஜ் முத்திரைக் குத்தப்பட்ட கம் பேக் பாடல். மாஸ் ஹீரோவாக மட்டுமே உருமாறியிருந்த தலயை இப்பாடலில் அழகிய  அப்பாவாக காட்டியதில் ஹாரிஸின் மியூசிக் செய்த மேஜிக்கின் ஷேர் அதிகம்.பென்னி தயாளின் மென்குரலில் பல அப்பாக்களின் காலர் ட்யூனாக இருக்கும் இப்பாடலின் வரிகளுக்குச் சொந்தக்காரர் தாமரை என்பது பெண்மையின் அழகியல். ‘ஒருபோதும் வந்து மோதமாட்டாய் என்னை அறிந்தால்’ என கெத்து காட்டி ஹிட்டு கொடுத்தார் ஹாரிஸ்.

பாடலின் லிங்க்

:

டங்காமாரி: (படம்-அனேகன்)

2015ல் ஹாரிஸ்ஸின் அடுத்த அதார் உதார் ஹிட். லக்சரி ட்யூட் முதல் சேரி மாமே வரை அனைவரிலும் டங்காமாரி போனான் ஊரி. சென்னை கானா பாடல் வரிகளின் நாயகனாய் வளர்ந்து வரும் ரோகேஷுக்கு தமிழ் சினிமாவில் முதல் வரி ‘டங்காமாரி ஊதாரி’. மரண கானா விஜி, தனுஷ், நவீன் மாதவ் ஆகிய மூவரும் கலந்து கட்டிய இப்பாடலை டப்ஸ்மாஷில் பாடியும் ஆடியும் பார்க்காத இளசில்லை. திரையில் தனுஷின் வெறியாட்டத்தில்  டங்காமாரி இன்னும்  தெறி.

பாடலின் லிங்க்:


 


மெண்டல் மனதில்: (படம்- ஓ காதல் கண்மணி)

ரஹ்மானும் மணிரத்னமும் எப்போது இணைந்தாலும் ஒரு மேஜிக் மியூசிக் ஆல்பம் நிச்சயம். இந்த வருடம் அந்த மேஜிக் ஓ காதல் கண்மணியில் முழுக்க முழுக்க காதலும் காதல் நிமித்தமுமாய்.அதிலும் மெண்டல் மனதில் பாட்டுக்கு  மெண்டல் ஆகாத ஜோடியில்லை. மணிரத்னத்தின் இன்னைக்கு ட்ரெண்ட் வரிகளுக்கு ரஹ்மான்னும் ஜோனிட்டா காந்தியும் லைக்கா லைக்காவென பாடியது லைக்ஸ் குவித்தது. மெண்டல் மனதில் காதல் ஜோடிகளின் மனதில் இந்த வருடத்தின் துள்ளல் ஹிட்.

பாடலின் லிங்க்:


 

கருப்பு நிறத்தழகி: கொம்பன்

கார்த்தி, லெட்சுமிமேனன், ராஜ்கிரண், கோவைசரளா நடிப்பில் உருவான படமே கொம்பன். முத்தையா இயக்கியிருக்கும் இப்படத்திற்கு இசை ஜி.வி.பிரகாஷ். இப்படத்தில் வேல்முருகன், மாளவிகா சுந்தர் இணைந்து பாடிய கருப்பு நிறத்தழகி வெளியான நேரத்தில் செம ஹிட். “கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு” பாடலின் லேட்டஸ்ட் வெர்சன் போல இசை பிரியர்களின் மனதில் இடம் பிடித்தது. இப்பாடலை எழுதியவர் ரா.தனிக்கொடி.

பாடலின் லிங்க்:

ஜிங்கிலியா ஜிங்கிலியா : ( புலி)

2015ல் விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு நடுவே வெளியான படமே புலி. சித்திரகுள்ளராக மாறி புலி ஆட்டம் போட்ட பாடலே ஜிங்கிலியா ஜிங்கிலியா. இப்பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியாவதற்குள்ளேயே இணையத்தில் லீக்காகி வைரல் ஹிட் அடித்தது. அவ்வளவு ரெஸ்பான்ஸ் பாடல் வெளியாகும் முன்பே பெற்றது. பின்னர் பாடல் வெளியானது தான் தாமதம், விஜய் ரசிகர்களை தகிடதகிட ஆட்டம் போடவைத்தப் பாடலே ஜிங்கிலியா. 

பாடலின் லிங்க்:

டன்டனக்கா: (படம்- ரோமியோ ஜூலியட்)

2015ன் சென்சேஷனல் சாங். கடந்த வருடங்களில் மெலோடிகளால் லைம் லைட்க்கு வந்த இமானின் இசையில் இந்த வxருடம் அனிருத் போட்ட டன்டனக்கா எட்டுத்திக்கும் பக்கா ஹிட். ரைமிங் வரிகளுக்கு பேர் போன டி ஆரின் பெயரிலேயே ரைமிங் லிரிக்ஸ் எழுதி செம சொல்ல வைத்தார் ரோகேஷ். டி. ஆர் போட்ட கேஸில் திரையில் பாடலின் சில வரிகள் சென்சார் ஆகியிருந்தாலும் திரைக்கு வருவதற்கு முன்பே ஆல்பத்தில் முழுப்பாடலும் படு வைரல்.

பாடலின் லிங்க்:

 

ஏயா ஏ கோட்டிக்காரா: (படம்- பாபநாசம்)

2015ன் காம்போகளில் அட! போட வைத்தது கமல்ஹாசன் – ஜிப்ரான் காம்போ. உத்தமவில்லன், பாபநாசம், தூங்காவனம் என இருவரும் சேர்ந்து இந்த வருடம் வரிசை கட்டினர். பாபநாசம் படத்தில் வரும் இப்பாடல் கேட்கவும் பார்க்கவும் அவ்வளவு ஃப்ரஷ். சுந்தர் நாராயண ராவ் மற்றும் மாளவிகா அனில்குமார் குரல்களில் நா.முத்துக்குமாரின் தென்காசித் தமிழ் வரிகள் கொள்ளை அழகு. ஜிப்ரானின் அடுத்தடுத்த மூன்று படங்களில் நச்சென்று நம் மனதில் நின்றது  ஏயா ஏ கோட்டிக்காரா.

பாடலின் லிங்க்:தீமைதான் வெல்லும்: (படம்- தனி ஒருவன்)

அறிமுகமான ஆண்டிலேயே மூன்று படங்களுக்கு இசையமைத்து ஹாட்ரிக் ஹிட் கொடுத்தார் ஆதி. மூன்றாவது படம் 2015ன் ப்ளாக் பஸ்டர், தனி ஒருவன். படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட். ஆனாலும் தீமைதான் வெல்லும் ஆதியின் பெஞ்ச் மார்க் பாடல். ஹீரோவை விட ஸ்ட்ராங்கான வில்லன் என்ற தனி ஒருவனின் தனித்துவத்தை இப்பாடல் அடுத்த தளத்திற்கு எடுத்துச் சென்றது. பாடலின் இடையில் அரவிந்த் சாமி பேசிய டயலாக்ஸ் மிரட்டலின் உச்சம். ஆதியே எழுதி பாடிய தீமைதான் வெல்லும் இந்த வருடம் அனைவரையும் வென்றது.

பாடலின் லிங்க்


:


கண்ணால கண்ணால: (படம்- தனி ஒருவன்)

தனி ஒருவனிலிருந்து இந்த வருடத்திற்கான மற்றொரு லவ் ஹிட் கண்ணால கண்ணால பாடல். ஆதியின் வரிகளில் அறிமுக பாடகர் கௌஷிக் க்ரிஷ் மற்றும் பத்மலதா பாடிய இந்த பாடல் சிம்ப்ளி ஸ்வீட் ரகம். நயன்தாரா, ஜெயம் ரவியின் ஆன் ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி தியேட்டரில் இருந்த காதல் ஜோடிகளை பத்திக்கொள்ள வைத்தது. ஈர்க்கும் வரிகளாலும் அழகான காட்சியமைப்பினாலும் நம் கண்களுக்கு விஷுவல் ட்ரீட் வைத்தது கண்ணால கண்ணால.

பாடலின் லிங்க்


 

தங்கமே: (படம்- நானும் ரௌடி தான்)

2015ன் இரண்டாம் பாதியில் தான் தனது இன்னிங்சை நானும் ரௌடி தான் படத்தில் பட டைட்டிலின் தொனியிலேயே தொடங்கினார் அனிருத். தங்கமே உன்னத்தான் தேடி வந்தேன் நானே என்ற விக்னேஷ் சிவனின் வரிகளில் நம்மைத் தேடி வந்து தாக்கியது இந்தப் பாடல். அனிருத்தின் ப்ராண்டட் பெப்பி ஷாக்கடிக்கும் குரலில் விஜய் சேதுபதி திரையில் தித்தித்தார். ஸ்கிரீனில் விஜய் சேதுபதிதான் நயன்தாராவை துரத்தி துரத்தி இப்பாடலை பாடினார் என்றாலும் பாடல் வரிகள் விக்னேஷ் சிவனுடையது !.

பாடலின் லிங்க்
 

நீயும் நானும்: (படம்- நானும் ரௌடி தான்)

அனிருத் தரப்பிலிருந்து 2015க்கான லவ்லி மெலோடி இந்த நீயும் நானும், பாடலின் வரிகள் தாமரை என்பது மேலும் வாவ் சொல்ல வைத்தது. அனிருத்தும் நீத்தி மோகனும் பாடிய இப்பாடல் மூட் செட்டிங் லவ் சாங்காக வைரலானது. வாரம் ஒரு பாடலாக ரிலீசான நானும் ரௌடி தான் ஆல்பத்தில் முதலாக வந்த தங்கமே பாடலை தொடர்ந்து வந்த நீயும் நானும் படத்தின் எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் கூட்டியது மட்டுமல்லாமல் அனிருத் ரசிகர்களை அனிருத்டா.. என காலரை தூக்க வைத்தது.

பாடலின் லிங்க்:


 

ஆலுமா டோலுமா: (படம்- வேதாளம்)

’அனிருத்தின் இசையில் ரோகேஷின் வரிகளில் தலயின் தர லோக்கல் பாடல்’ என்று தெரிந்தவுடனேயே ட்ரெண்டாக்க தயாராகிவிட்டார்கள் அஜித் ரசிகர்கள். வேதாளத்தில் மற்ற பாடல்கள் சுமார் என்ற போதிலும் அனிருத் மற்றும் பாத்ஷாவின் பவர்ஃபுல் குரல்களில் ஒன் மேன் ஷோ காட்டியது ஆலுமா டோலுமா. திரையில் தல போட்ட குத்தாட்டத்திற்கு மரத்தின் மேல் ஏறிய வேதாளமாய் ஆடித்தீர்த்தனர் தல வெறியர்கள்.

பாடலின் லிங்க்

 நா. மரகதமணி,
மாணவ பத்திரிகையாளர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!