அமீருடன் இணைகிறார் ஆரி?

2005 ஆம் ஆண்டு ஆடும்கூத்து படம் மூலம் நடிகரான ஆரி, அதன்பின் பாலச்சந்தரும் பாரதிராஜாவும் இணைந்து நடித்த ரெட்டச்சுழி, நெடுஞ்சாலை உட்பட பல படங்களில் நடித்தார்.

கடந்த ஆண்டு நயன் தாராவுக்கு ஜோடியாக மாயா படத்தில் நடித்து கவனத்தை ஈர்த்தார். அதன்பின் திருமணம் நடந்தது. கைவசம் ஒரிரு படங்கள் இருப்பதாகச் சொல்லப்பட்டது. அவற்றைத் தொடர்ந்து இப்போது ஒரு பெரியபடம் அவருக்கு அமைந்திருக்கிறதாம்.

அந்தப்படத்தில் இரண்டுநாயகர்கள். ஒரு நாயகனாக ஆரி நடிக்க,  அந்தப்படத்தில் இன்னொரு நாயகராக இயக்குநர் அமீர் நடிக்கவிருக்கிறாராம்.

படத்தை முகவரி, தொட்டிஜெயா, 2013 இல் வெளியான 6 உள்ளிட்ட படங்களை இயக்கிய துரை இயக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இப்படம் தொடர்பான பேச்சுவார்தைகள் வேகமாக நடந்துகொண்டிருப்பதாகவும் விரைவில் அறிவிப்பு வருமென்றும் சொல்கிறார்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!