இயக்குநர் ஆகிறார் விக்ரம்?

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரை நமது சியான் விக்ரம் இயக்கவிருக்கிறார் என்ற செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தனது ஒவ்வொரு படத்திற்கும் நடிப்பில், கெட்டப்பில் வித்தியாசம் காட்டி, தனது திறமையான நடிப்பின் மூலம் நம்மைக் கவர்ந்தவர் சியான் விக்ரம். சென்ற வருடம் ஷங்கர் இயக்கத்தில், இவர் நடிப்பில் வெளிவந்த ஐ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளும் வெளியிடப்பட்டு மாபெரும் வெற்றி அடைந்தது.

தற்போது கன்னடத்திலும் கால்பதிக்க உள்ளார் விக்ரம், ஆனால் நடிகராக அல்ல இயக்குநராக. கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாருடன் இணையவுள்ளார் என்பது தான் செய்தி. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளிலும் எடுக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் புனித் ராஜ்குமார் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாக உள்ளார் என கூறப்படுகிறது. எனினும் படத்தைப் பற்றிய அதிகார பூர்வ அறிவிப்புகள் ஏதும் இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் நடிப்பில் பல அவதாரங்கள் எடுத்திருந்தாலும், இந்த 2016 இல் அவர் எடுக்கப்போகும் இயக்குநர் அவதாரம் அவரது ரசிகர்களை நிச்சயம் மகிழ்ச்சியடையச் செய்யும். புனித் ராஜ்குமார் தற்போது சக்கரவியுகா மற்றும் அவரது 25வது படமான டாட்மனெ ஹட்கா ஆகிய படங்களில் நடித்துவருகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!