அனிருத்துக்குப் பதிலாக சந்தோஷ்நாராயணன்- தனுஷ் படத்தில் மாற்றம்

எதிர்நீச்சல், காக்கிச்சட்டை ஆகிய படங்களைத் தொடர்ந்து துரைசெந்தில்குமார் இயக்கும் படம் கொடி. இந்தப்படத்தில் தனுஷ் இரட்டைவேடங்களில் நடிக்கிறார். அண்ணன் தம்பியாக அவர் நடிக்கவிருப்பதாகவும் அண்ணன் அரசியல்வாதி என்றும் சொல்லப்படுகிறது. படத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷாவும் ஷாம்லியும் நடிக்கவிருக்கிறார்கள்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு நவம்பரிலேயே தொடங்குவதாக இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாகத் தள்ளிப்போய் இன்று தொடங்கியிருக்கிறது. படத்தின் கதைக்களமே பொள்ளாச்சி என்பதால் படப்பிடிப்பையும் அங்கேயே தொடங்கியிருக்கிறார்கள். சிலநாட்கள் தனுஷ் மட்டுமே நடிக்கிறார் என்றும் அதன்பின் மற்ற நடிகர் நடிகைகள் கலந்துகொள்வார்கள் என்றும் சொல்லப்படுகிறது. இந்தப்டபத்துக்கு முதலில் அனிருத் இசையமைப்பதாக இருந்தது.

தனுஷூடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அனிருத் படத்திலிருந்து விலகிக்கொண்டார் என்று சொல்லப்பட்டது. இப்போது படத்துக்கு சந்தோஷ்நாராயணன் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறாராம்.
 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!