வெளியிடப்பட்ட நேரம்: 12:48 (06/01/2016)

கடைசி தொடர்பு:13:16 (06/01/2016)

விஜய்சேதுபதி படத்தில் நடந்த ஆச்சரியம்

சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் தர்மதுரை படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு தேனியில் கடந்தமாதம் தொடங்கியது. சுமார் பதினைந்துநாட்கள் படப்பிடிப்பு என்று திட்டமிட்டுப் போனார்களாம்.

குறிப்பிட்ட நாட்களுக்கு முன்னதாகவே, எட்டுநாட்களிலேயே படப்பிடிப்பு நிறைவடைந்தததாகச் சொல்கிறார்கள். அண்மைக்காலமாக எல்லாப்படங்களும் திட்டமிட்டதைக் காட்டிலும் அதிகநாட்கள் ஆகிக்கொண்டிருக்கிற வேளையில் இது மிகவும் வியப்பான செய்தி என்கிறார்கள். அடுத்தகட்டப் படப்பிடிப்பு தற்போது தென்காசியில் நடந்துவருகிறதாம். இங்குதான் கதாநாயகிகள் நடிக்கவேண்டிய காட்சிகள் படமாக்கப்படவிருப்பதாகச் சொல்கிறார்கள்.

சிருஷ்டிடாங்கே மற்றும் தமன்னா ஆகியோர் தென்காசியில் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். சிருஷ்டிடாங்கே இரண்டுநாட்களுக்கு முன்பே வந்துவிட்டதாகவும் இன்றுமுதல் தமன்னா நடிக்கவிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. நயன்தாராவுடன் விஜயசேதுபதி நடித்த நானும்ரவுடிதான் படம் வெற்றி பெற்றது.

அதுபோல தமன்னாவுடன் அவர் நடிப்பதும் மிக எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கிறது. அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுகிற மாதிரி அவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் அமையும் என்கிறார்கள்.   

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்