சமூகப் பொறுப்புடன் நடிகர் கார்த்தி சொல்லும் அதிர்ச்சித் தகவல்

கார்த்தி தனது முகநூல் பக்கத்தில் முக்கிய பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பெற்றோர்களுக்குச் சின்ன விழிப்புணர்ச்சியைக் கொடுத்துள்ளார்.

குழந்தைகளை (occupational therapy) தொழில் சிகிச்சை மற்றும் (rehabilitation) புனர்வாழ்வு எனப்படும் உடல் முறை செயல்பாடுகள் குறித்த வகுப்புகளில் சேர்க்கையில் மிகவும் கவனமாக  இருக்கவும். இது போன்ற வகுப்புகளில் குழந்தைகளைச் சேர்க்க வேண்டாம்.

அப்படியே சேர்த்தாலும் உங்களது பார்வையில் அல்லது சிசிடிவி கேமராக்கள் மூலம் பார்க்கும்படியான வகுப்புகளாகப் பார்த்துச் சேர்க்கவும். நான் இதுபோன்ற வகுப்புகள் குறித்து அதிர்ச்சிகரமான தகவல்களைக் கேள்விப்பட்டேன். இது போன்ற வகுப்புகளில் குழந்தைகளை நடத்தும் முறை சரியாக இருக்காது. மேலும் குழந்தைகளை உங்கள் கண் பார்வையிலேயே வைத்திருங்கள். எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!