13 வருடங்களாக த்ரிஷாவை காதலிக்கச் செய்யும் 11 விஷயங்கள்!

த்ரிஷா நடிக்க வந்து 13 வருடங்களாகிவிட்டது. ஆனால், இன்றும் டாப் 10 ஹீரோயின் லிஸ்ட் போட்டால் அதில் இடம் பிடிக்கிறார் இந்த ஸ்லிம்ஃபிட் அழகி. த்ரிஷா ஏன் இன்றும் நம் ‘குட் புக்’ லிஸ்ட்டில் இருக்கிறார்? பார்க்கலாமா!

1. நம்ம சென்னைப் பொண்ணு. ஒரு தமிழ் பொண்ணு மில்லினிய டிரெண்டுக்கேற்ப சினிமாவில் அறிமுகமானது நம்மவர்களுக்கு உற்சாகப் பெருமிதமாக இருந்தது!

2. அன்றும் இன்றும் சைஸ் ஜீரோ அழகி. த்ரிஷாவை நீங்கள் குண்டாக...ஏன், பூசினாற் போல பார்த்திருக்க முடியாது. ஃபிட்னஸ் ஃப்ரீக்.

3. விஜய்யின் ப்ளாக் பஸ்டர் ஹிட் கில்லி, விக்ரமின் ப்ளாக் பஸ்டர் ஹிட் சாமி, அஜித்தின் ப்ளாக் பஸ்டர் ஹிட் மங்காத்தா... இந்த மூன்று படங்களும் டிரெண்டிங்கில் இருக்கும் வரை த்ரிஷாவை யாரும் அசைச்சுக்க முடியாது!

4. விண்ணைத் தாண்டி வருவாயா ஜெஸ்ஸியாக எந்தளவுக்கு ஈர்த்தாரோ, அதே அளவுக்கு ’என்னை அறிந்தால்’ ஹேமானிகாவாகவும் வசீகரிப்பார். அது த்ரிஷா மேஜிக்!

5. இப்போது அறிமுகமாகும் ஹீரோக்களுடன் நடித்தாலும் செம ஃபிட்டாக இருப்பார் த்ரிஷா.

6. வருண் மணியனுடன் திருமணமே நிச்சயமானது. ஆனால், பின்னர் அபிப்ராய பேதங்கள் உண்டாகவும், எதைப் பற்றியும் கவலைப்படாமல் தன் மனசுக்கு சரியென்று பட்டதைச் செய்தார் த்ரிஷ்.

7. விலங்குகள் மீது அதீத பிரியம் வைத்திருக்கிறார் த்ரிஷா. ஆனால், அது சும்மா ஷோ இல்லை. நிஜமாகவே ஆத்மார்த்தமான அன்பு வைத்திருப்பார் த்ரிஷா. அதனாலேயே பெட்டாவின் ’ஏஞ்சல் ஆஃப் அனிமல்’ (விலங்குகளின் தேவை) பட்டம் வென்றிருக்கிறார்.

8. உடன் எத்தனை நடிகைகள் அனைவரையும் ஃப்ரெண்ட் ஆக்கிக் கொள்வதில், த்ரிஷாவை அடித்துக் கொள்ள ஆளே இல்லை.

9. தன் ஸ்லிம் ஃபிட் மற்றும் எனர்ஜி காரணமாக ஃபேண்டா விளம்பரத்தில் ராணி முகர்ஜி, ஸ்கூட்டி பெப் ப்ளஸ் விளம்பரத்தில் ப்ரீத்தி ஜிந்தா, ஃபேர் எவர் விளம்பரத்தில் அசின் என பாலிவுட் நாயகிகளை எல்லாம் ஓரம்கட்டி அந்த விளம்பரங்களின் அம்பாசிடர் ஆனவர்.

10. இவ்வளவு சம்பளம் கேட்டு த்ரிஷா அடம் பிடிக்கிறார் என்று இதுவரை செய்திகள் வந்ததே இல்லை.

11. ஸ்காண்டல் வீடியோவில் முதலில் சிக்கிய பிரபலம் த்ரிஷாதான். குளியல் வீடியோ சர்ச்சையிலிருந்து ‘ஜஸ்ட் லைக் தட்’ மீண்டு வந்தார் த்ரிஷா. விருப்பமில்லாத ஒரு விஷயம் நடந்தது தன்னை எந்த விதத்திலும் பாதிக்காது என்று த்ரிஷா காட்டிய அந்த கெத்து... அனைத்துப் பெண்களும் பழகிக் கொள்ள வேண்டியது!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!