Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அரசியலுக்கு வருகிறாரா அஜித்?

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா , வரமாட்டாரா என்ற கேள்விக்கே இன்னும் பதில் கிடைத்தபாடில்லை இன்னிலையில் அடுத்த சர்ச்சையைக் கிளப்பி விட்டுள்ளார்கள். அஜித் விரைவில் அரசியலில் சேரவிருப்பதாகச் செய்திகள் பரவி வருகின்றன.

பாஜக கட்சியினர் அஜித்தை தங்கள் கட்சியில் இணையும்படி வற்புறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தைப் பொருத்தமட்டில் இப்போதைக்கு இளைஞர்கள் வட்டாரம் அதிகம் என்றால் ஒன்று விஜய், மற்றொன்று அஜித் என்ற நிலையில் அஜித்தை தமிழக அரசியலில் இறக்கத் திட்டமிடுவதாகத் தெரிகிறது.

தனக்கான ரசிகர் மன்றங்களையே கலைத்த அஜித் கண்டிப்பாக அரசியலுக்கெல்லாம் வரமாட்டார் என அவரது ரசிகர்கள் உறுதியாக நம்புகிறார்கள். பாஜகவினர்,  ரஜினிகாந்த், விஜய் என ஒவ்வொரு பெரிய நடிகர்களாக அரசியலில் இழுக்க திட்டமிட்டனர் என்ற குற்றச்சாட்டு ஏற்கெனவே உள்ள நிலையில் இப்போது இப்படி ஒரு செய்தி வந்துகொண்டிருக்கிறது.

கடந்த சில நாட்களாக இந்தச் செய்தி வந்துகொண்டிருக்கிற போதும், இருதரப்பினரும் அதுபற்றி இதுவரை எதுவும் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!