Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஜய்யுடன் நடிக்கும் இரண்டு நாயகிகள் யார்?

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தெறி இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது.அவருடைய அடுத்த படத்தின் வேலைகள் இப்போது வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன. “அழகியதமிழ்மகன்” படத்தை இயக்கிய பரதன் இயக்கத்திலேயே விஜய்யின் 60வது படம் தயாராகவிருக்கிறது.

இப்படத்திற்கான ஹீரோயின் தேடும் படலத்தில் ஈடுபட்டுள்ளனர் படக்குழுவினர். துப்பாக்கி படத்தில் அஜித்துடன் ஜோடி சேர்ந்த காஜல் அகர்வாலிடம் பேச்சுவார்த்தை நடந்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. தற்பொழுது “அமரகாவியம்”, “இன்று நேற்று நாளை” படங்களில் நடித்த மியாஜார்ஜிடம் தற்பொழுது பேச்சுவார்த்தை நடந்துவருகிறதாம்.

மியாஜார்ஜ் மட்டுமல்லாமல், காக்காமுட்டையில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷும் விஜய்யின் 60வது படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படப்பிடிப்பு தொடங்கும் போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
[X] Close