இந்திய அளவில் பெரும் பொறுப்பு, கமலுக்குக் கிடைக்குமா?

சினிமா படைப்பாளிகளுக்கும் சென்சார் தரப்பிற்கும் உள்ள உறவு அவ்வப்போது விரிசல்களை சந்தித்தாலும் அவர்கள் இல்லாமல் இவர்கள் இல்லை, இவர்கள் இல்லாமல் அவர்கள் இல்லை என்ற நிலை இருப்பதை நம்மால் மறுக்க முடியாது.

தற்போது இந்திய சென்சார் தரப்பு கமல் ஹாசனை சென்சார் போர்டின் முக்கியப் பொறுப்பில் அமர வைக்கும் திட்டத்தில் உள்ளனர். மேலும் இந்தியா முழுவதும் திறமையான சினிமா நபர்களை சென்சாரில் அங்கமாக்கும் முயற்சி நடந்து வருகிறது.அதில் கமல் ஹாசன், இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஷாஜி என்.கருண், பெங்கால் இயக்குநர் கௌதம் கோஷ் ஆகியோரின் பெயர்களும் பரிந்துரைப் பட்டியலில் உள்ளன. 

சினிமாவைச் சார்ந்த நபர்களே சென்சாரில் முக்கிய பங்கு வகிக்கும் போது சில சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்பதே இந்த முடிவின் நோக்கம். சமீபகாலமாக சினிமா படைப்பாளிகள் சென்சார் தரப்பால் சினிமாவின் சுதந்திரமின்மை நிலவுவதாகக் கூறப்பட்டு வருகிறது.

விஸ்வரூபம் படவேளையில் கமல் ஹாசனே சென்சார் கத்தரித்த காட்சிகள் குறித்து வருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர்கள் வசமே பொறுப்புகள் செல்கையில் கண்டிப்பாக சினிமா துறையில் ஒரு முன்னேற்றம் நிகழலாம் என இந்திய சென்சார் சிந்திப்பதாகவே தெரிகிறது. கமல்ஹாசன் இந்த வாய்ப்பை ஏற்பாரா? கமலை அவர்கள் ஏற்பார்களா? என்பதெல்லாம் இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!