ராஜிவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரை விடுவிக்கக்கோரி நடிகர் சங்கம் பேரணி!

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி முதல்வரை சந்திக்க திரையுலகம் விரைவில் பேரணி. தென்னிந்திய திரைப்பட அனைத்து சங்கங்களும் சேர்ந்து 161 சட்டத்தின் கீழ் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரி முதல்வரிடம் பேரணியாக சென்று மனு கொடுக்க உள்ளனர் .

இந்தப் பேரணி மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்கும் என நம்புகிறார்கள். இந்தப் பேரணி குறித்து நடிகர் சங்கத் தலைவர் நாசர் பேசுகையில், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 7 பேரையும் 161ம் சட்டப்பிரிவை பயன்படுத்தி விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைக்க இருக்கிறோம்.

அதனை வெறும் கடிதமாக கொடுக்காமல், முதல்வர் ஒதுக்கும் நேரத்தை வைத்து ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் பேரணியாக சென்று முதல்வரிடம் கோரிக்கை வைக்க இருக்கிறோம். ஒட்டு மொத்த தமிழ் திரையுலகமும் பேரணியாக திரளும் போது மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்படும் என்று கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!