ஏ.ஆர்.ரகுமானால் யுவனுக்குப் பாதிப்பு

சென்னையில் கடந்த 16 ஆம் தேதி நடைபெற்ற ஏ.ஆர்.ரகுமானின்  நெஞ்சேஎழு இசைநிகழ்ச்சி பலத்த வரவேற்பைப் பெற்றது.  இதைத் தொடர்ந்து  ஜனவரி23ஆம்தேதி கோவையிலும் பிரம்மாண்டமான முறையில்நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இதன்காரணமாக யுவன்ஷங்கர் ராஜா நடத்தவிருந்த இசைநிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “யார்ஸ் மீடியா நெட் வொர்க் என்கிற எங்கள் நிறுவனம் மூலம் இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் ' வாய்ஸ் ஆப் யுவன்' இசை நிகழ்ச்சியை கோவை மாநகரில் ஜனவரி 23ஆம் தேதியும், மதுரையில் வரும் 26 ஆம் தேதியும் நடத்த இருந்தோம்.

அதே தேதிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியும் அங்கே நடக்க இருப்பதால் யுவனின் இசை நிகழ்ச்சி மற்றுமொரு தேதியில் நடக்க உள்ளது. தேதி முடிவான பின்னர் அறிவிக்கப்படும்.

இந்த நிகழ்ச்சிக்காக ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் காத்துக் கொண்டு இருந்தவர்களின் ஏமாற்றத்தை நாங்கள் அறிவோம். ஏற்கனவே அனுமதி சீட்டு வாங்கிய ரசிகர்களின் பணமும் திருப்பித் தரப்படும். ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியத்துக்கு நாங்கள் வருந்துகிறோம்” என்று சொல்லியிருக்கிறார்கள்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!