வெளியிடப்பட்ட நேரம்: 16:34 (20/01/2016)

கடைசி தொடர்பு:16:40 (20/01/2016)

34 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாம்பாகமாகும் தமிழ்ப்படம்

குடும்பப் படங்கள் என தமிழில் வெளியான படங்களை லிஸ்ட் எடுத்தால் கண்டிப்பாக மணல் கயிறு படத்தை நம்மால் தவிர்க்கவே முடியாது. முக்கியமாக தாய்மார்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற படம். விசு இயக்கத்தில் எஸ்.வி.சேகர், சாந்தி கிருஷ்ணா, மனோரமா, விசு, உள்ளிட்ட பலர் நடிப்பில் 1982ல் வெளியான படம்.

 இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது. 34 வருடங்கள் பழமையான இப்படத்தின் இரண்டாம் பாகத்தை யாருடா மகேஷ் படத்தின் இயக்குநர் மதன் குமார் இயக்குகிறார். தயாரிப்பு ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ். இரண்டாம் பாகத்திலும் விசு, மற்றும் எஸ்.வி.சேகர் நடிக்க இருக்கிறார்கள்.

சமீபகாலமாகவே விசு படங்களில் நடிப்பதைக் குறைத்திருந்தார் தற்போது இப்படத்தின் மூலம் மீண்டும் நடிக்க இருக்கிறார். சமீபகாலங்களாக குடும்பப் படங்கள் குறைந்துவிட்ட தமிழ் சினிமாவில் மணல்கயிறு பாகம் 2 மாற்றத்தை உருவாக்குமா பார்க்கலாம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்