ரசிகர்கள் கூட்டத்தைச் சமாளிக்க முடியாமல் அரசாங்க காரில் ஏறிப்போன அஜித்

ஆரம்பம் படப்பிடிப்பின் போது அஜித்துக்கு அடிபட்டது. வலியைப் பொறுத்துக் கொண்டு இரண்டு படங்கள் நடித்துவிட்டார். 'வேதாளம்' படப்பிடிப்பில், அஜித்துக்கு அடிபட்ட இடத்திலேயே மீண்டும் அடிபட்டது. இதனால், உடனடியாக மருத்துவம் செய்தாக வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள்.

ஆனாலும் வேதாளம் படத்தின் படபிடிப்பை முழுமையாக முடித்த பிறகு அறுவை சிகிச்சை செய்து கொண்டார் அஜித். ஒரே நேரத்தில் மூன்று இடங்களில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. அதன்பின் வீட்டிலேயே ஒய்வு எடுத்து வந்தார் அஜித்.

நன்றாக நடக்கிற அளவுக்குத் தயாரானதும் குடும்பத்தினருடன் லண்டன் சென்று சில மாதங்கள் ஒய்வெடுக்கத் திட்டமிட்டிருப்பதாகச் சொல்லப்பட்டது. அதை உறுதிப்படுத்தும் விதமாக நேற்று இரண்டாவது மகன் ஆத்விக் பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பாக பாஸ்போர்ட் அலுவலகம் வந்திருந்தார் அஜித். குடும்பத்தினருடன் அஜித் வந்திருக்கும் தகவல் கொஞ்ச நேரத்திலேயே வெளியில் பரவிவிட்டது.

இதனால் பெரும் கூட்டம் பாஸ்போர்ட் அலுவலகம் முன்பாக கூடியது. பாஸ்போர்ட் அலுவலகம் அருகில் அஜித் மற்றும் ஷாலினி, அனோஷ்கா, ஆத்விக் ஆகியோர் இருக்கும் புகைப்படங்களும் வெளிவந்தன. அலுவலகம் முன்பாகப் பெரும் கூட்டம் கூடிவிட்டதால், அஜித்தின் காரில் போனால் ரசிகர்களைத் தாண்டிப் போவது சிரமமாகிவிடும் என்பதால், அங்கிருந்த அதிகாரி தன்னுடைய காரில் அஜித்தை ஏற்றி அனுப்பி வைத்தாராம்.

அதன்பின் சிறிதுநேரம் கழித்து அஜித் மனைவி ஷாலினி மற்ரும் அவர்களுடைய குழந்தைகளும் புறப்பட்டுச் சென்றனராம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!