அஜித் நம்பர் ஒன் நடிகர், ரஜினிக்கு இரண்டாமிடம்- புதிய கருத்துக்கணிப்பால் பரபரப்பு

சென்னை லயோலா கல்லூரி  பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான  ‘மக்கள் ஆய்வு’ எனும் அமைப்பு கருத்து கணிப்பு நடத்தியது.

தமிழ் நடிகர்களில் முதலிடம் என்று சொல்லப்பட்ட ரஜினி இரண்டாமிடத்துக்குச் சென்றிருக்கிறார். அவருக்குப் பதிலாக முதலிடம் பிடித்திருப்பவர் அஜித். அந்தக் கருத்துக் கணிப்பு விவரம் ....

தமிழ்நாட்டில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்ற கேள்விக்கு 16 சதவீதம் பேர் அஜீத்தையும், 15.9 சத வீதம் பேர் ரஜினியையும், 9.2 சதவீதம் பேர் விஜயையும் கூறியுள்ளனர். கமலஹாசனுக்கு 5.9 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். சூர்யாவுக்கு 4.3 சதவீதம் ஆதரவு கிடைத்துள்ளது.

ரஜினிக்குப் போட்டியாக விளங்கும் கமலுக்கு நான்காமிடம் தான் கிடைத்திருக்கிறது. அஜித்துக்குப் போட்டி என்று சொல்லப்படும் விஜய் மூன்றாமிடம் பிடித்துள்ளார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!