Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆயுதஎழுத்துக்கும் அரண்மனை 2 வுக்கும் என்ன சம்பந்தம்?- விளக்கும் சித்தார்த்

‘அரண்மனை’ வெற்றியை தொடர்ந்து  சுந்தர்.சி இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம் ‘அரண்மனை 2’. ஹன்சிகா, சித்தார்த், த்ரிஷா, பூனம்பாஜ்வா, சூரி, கோவை சரளா ,மனோபாலா உட்பட பலர் நடித்திருக்கும் இந்தப்படத்துக்கு ஹிப்ஹாப்தமிழா இசையமைத்திருக்கிறார்.

இந்தப்படம் பற்றி சித்தார்த்திடம் கேட்டபோது,

“இந்தப்படத்தில் மூன்று வகையான பேய்கள் இருக்கு. சூரி, கோவை சரளா, மனோபாலா போன்ற காமெடி பேய்கள், ஹன்சிகா, த்ரிஷா, பூனம்பாஜ்வா  என்கிற கவர்ச்சி பேய்கள், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், ஆர்ட் டைரக்டர்னு டெக்னிஷன் பேய்கள் இருக்காங்க. நான் பேய் படத்தில் நடிப்பது இதுதான் முதல்முறை.

‘ஆயுத எழுத்து’ படத்துக்கு பிறகு கிட்டத்தட்ட 12 வருட இடைவெளிக்கு பிறகு நானும் த்ரிஷாவும் சேர்ந்து நடிச்சிருக்கோம். அந்தப்படத்தில் தாய்லாந்து கடற்கரையில் இருவரும் ஒரு பாட்டு சீனில் நடித்திருப்போம். சொல்லி வச்சது மாதிரி இந்தப்படத்திலும் அந்தக் கடற்கரையில் இருவருக்கும் ஒரு பாட்டு இருக்கு.” என்கிறார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்