கௌதமுடன் இணையும் அனிருத், ஜெயம்ரவி, தனுஷ்

இயக்குநர் கௌதம்மேனனுடன் கல்லூரியில் படித்த நண்பர் மதன். கௌதம் விளம்பரப்படங்கள் எடுக்கும் காலத்திலிருந்து அவருடன் பணியாற்றியவர். விண்ணைத்தாண்டிவருவாயா படத்தின் நான்கு தயாரிப்பாளர்களில் மதனும் ஒருவர்.

கௌதமுடன் இணைந்திருந்த மதன், அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாகப் படங்கள் தயாரிக்கத் தொடங்கினார். அழகர்சாமியின்குதிரை, வருத்தப்படாதவாலிபர்சங்கம் உட்பட பல வெற்றிப்படங்களைத் தயாரித்து முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக இருக்கும் மதன் இப்போது தனுஷ் நடிக்கும் கொடி படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர். இப்போது மீண்டும் கௌதமும் மதனும் இணையவிருக்கிறார்கள்.

மதன் தயாரிப்பில் கெளதம் இரண்டு புதியபடங்களை இயக்கவிருக்கிறாராம். ஒரு படத்தில் ஜெயம்ரவியும் இன்னொரு படத்தில் தனுஷூம் நடிக்கவிருக்கிறார்கள். ஜெயம்ரவி நடிக்கும் படத்துக்கு “துருவநட்சத்திரம்” என்றும் தனுஷ் படத்துக்கு “எனைநோக்கும்தோட்டா” என்றும் பெயர் வைத்திருக்கிறார்களாம்.

இவற்றில் துருவநட்சத்திரம் படத்துக்கு அனிருத் இசையமைக்கவிருக்கிறாராம். தனுஷ் படத்துக்கு ஹாரிஸ்ஜெயராஜ் இசையமைக்கவிருக்கிறாராம். விரைவில் இது பற்றிய அறிவிப்புகள் வெளிவரும் என்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!