Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

செல்வராகவன் எஸ்.ஜே.சூர்யா படத்தின் பெயர்?

  செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா ஆகியோர் நடிக்கவிருக்கும் படத்தின் வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன. இந்தப்படத்துக்கு இசையமைப்பாளராக சந்தோஷ்நாராயணன் ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்தப்படத்தில் இன்னொரு நாயகியாக அட்டகத்தி நந்திதாவும் இருக்கிறார்.

விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தப்படம் திகில் வகையைச் சேர்ந்ததென்று சொல்லப்பட்டது. அதை உறுதிப்படுத்தும் விதமாகப் படத்துக்கு பழையதமிழ்ப்படமொன்றின் தலைப்பையே பெயராக வைத்திருக்கிறார்களாம்.

1963 ஆம் ஆண்டு ஸ்ரீதர் இயக்கத்தில் கல்யாண்குமார், தேவிகா, நாகேஷ், மனோரமா உட்பட பலர் நடித்திருந்த படம் நெஞ்சம்மறப்பதில்லை. அந்தப்படமும் ரொமான்டிக் ஹாரர் வகையைச் சேர்ந்த படம்தான். நெஞ்சம் மறப்பதில்லை என்கிற பாடல்வரிகள் காரணமாக இன்றும் புகழ்பெற்றிருக்கும் அந்தப்பெயரையே தன் படத்துக்கு வைத்திருக்கிறாராம் இயக்குநர் செல்வராகவன்.  

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
[X] Close