14 ஆண்டுகளுக்குப் பிறகு கமலோடு சேரும் நடிகை

கமல் தன்னுடைய அடுத்தபடத்துக்காகத் தயாராகிக்கொண்டிருக்கிறார். மலையாளஇயக்குநர் டி.கே.சஞ்சீவ்குமார் இயக்கவிருக்கிறார்.

முழுக்க அமெரிக்காவிலேயே படமாக்கப்படவிருக்கும் அந்தப்படத்தில் முதன்முறையாக அவருடைய மகள் ஸ்ருதிஹாசனும் சேர்ந்து நடிக்கவிருக்கிறார். இந்தப்படத்தில் நீண்டஇடைவெளிக்குப் பிறகு ரம்யாகிருஷ்ணன் கமலுடன் சேர்ந்து நடிக்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது.

வழக்கம்போல அந்தச் செய்தியை யாரும் உறுதிப்படுத்தாமல் இருந்தனர். இப்போது அதை ரம்யாகிருஷ்ணனே உறுதிப்படுத்தியிருக்கிறார். அவருடைய முகநூல் பக்கத்தில் இந்தச்செய்தி உண்மைதான் என்று சொல்லியிருக்கிறார். அதோடு, இந்தப்படத்தில் நடிப்பதைப் பெருமையாகக் கருதுகிறேன் அதேநேரம் கொஞ்சம் பதட்டமாகவும் இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்.

2002 ஆம் ஆண்டு கே.எ.ரவிகுமார் இயக்கத்தில் வெளியான பஞ்சதந்திரம் படத்தில் கமலுடன் நடித்திருந்தார் ரம்யாகிருஷ்ணன். அதன்பின்னர் பதினான்குஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் சேர்ந்து நடிக்கவிருக்கிறார்கள். 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!