விசாரணையா.. பெங்களூர் நாட்களா?

பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே நாளை வெளியாக இருக்கிறது விசாரணை. இப்படத்தோடு, மலையாளத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய பெங்களூர் டேஸ் படமும் பெங்களூர் நாட்கள் என்ற பெயரில் வெளியாகிறது. இரண்டு படங்களைப் பற்றிய ஒரு பார்வை:-

கோவையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சந்திரகுமார் எழுதிய ‘லாக்அப் ’ நாவலால் ஈர்க்கப்பட்ட வெற்றிமாறன், முதலில் சோதனை முயற்சியாகஒரு மணி நேரம் மட்டுமே ஓடக்கூடிய படமாக இதை எடுக்கத் திட்டமிருந்தார். அட்டகத்தி தினேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, பிறகு நாயகியாக ’கயல்’ ஆனந்தியும் கைகோர்க்க ஒன்றே முக்கால் மணி நேரப் படமாக தயாரானது விசாரணை.

12 செப்டம்பர் 2015ல் வெனிஸ் சர்வதேச ஃப்லிம் ஃபெஸ்டிவலில் வெளியான விசாரணை படம் பலத்த வரவேற்பைப் பெற்றது. நாளை வெள்ளித்திரையில் வெளியாகும் இந்தப் படம், ஏற்கனவே பத்திரிகையாளர்களுக்கு போட்டுக் காட்டப்பட்டு, பரவலான பாராட்டைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

பெங்களூர் நாட்கள், அஞ்சலி மேனன் இயக்கத்தில், நிவின் பாலி, துல்கர் சல்மான், ஃபகத் ஃபாசில், நஸ்ரியா, நித்யா மேனன், பார்வதி, நடித்து மலையாளத்தில் சக்கை போடு போட்ட பெங்களூர் டேஸ் படத்தின் ரீ மேக். தமிழில் பாபி சிம்ஹா, ஆர்யா, ராணா, ஸ்ரீதிவ்யா, சமந்தா ஆகியோர் நடிக்க, பார்வதியின் வேடத்தில் தமிழிலும் அவரே நடிக்கிறார்.

பலரின் எதிர்பார்ப்புகளை எகிற அடிக்கும் விசாரணை, இளசுகளின் ஃபேவரைட்டான நடிகர்கள் நடிக்கும் பெங்களூர் நாட்கள் ஆகிய இரண்டுக்கும் மத்தியில் பிரசாந்தின் சாகசம் படமும் வெளியாக இருக்கிறது. சென்ற ஆண்டு பொங்கலில் ஷங்கரின் ‘ஐ’, விஷாலின் ‘ஆம்பள’ படங்களுடன் வெளியான ஜி.வி.ப்ரகாஷ்குமாரின் டார்லிங், வசூலில் லாபமீட்டியது போல் சாகசம் ஏதேனும் சாகசம் செய்யுமா என்பதும் சஸ்பென்ஸ்தான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!