வெளியிடப்பட்ட நேரம்: 12:02 (08/02/2016)

கடைசி தொடர்பு:12:38 (08/02/2016)

கும்கி 2ம் பாகம்? பிரபு சாலமனின் பதில் என்ன?

பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடிப்பில் உருவான படம் கும்கி. படமும் பாடல்களும்  மெகா ஹிட்டானது. தற்சமயம் தனுஷ் படத்தில் பிசியாக இருக்கும் பிரபு சாலமன் கும்கி படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க இருப்பதாகக் கூறியுள்ளார்.

அவர் கூறுகையில் ’அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் திட்டத்தில் இருக்கிறேன். இரண்டாம் பாகத்தை கொஞ்சம் பெரிய பட்ஜெட்டில் எடுக்க விரும்புகிறேன்.  படத்தில் அதே நடிகர்கள் நடிக்கிறார்களா, அல்லது வேறு நடிகர்களா என்பது இன்னும் நான் முடிவு செய்யவில்லை.

தற்சமயம் தனுஷ் படத்தின் போஸ்ட் புரடக்‌ஷன் பணிகளில் மும்முரமாக இருக்கிறேன். தனுஷ் நடிக்கும் படத்தை கண்டிப்பாக மே, ஜூன் மாதங்களில் ரிலீஸ் செய்துவிட்டு அடுத்தகட்டமாக கும்கி வேலைகளில் ஈடுபட உள்ளேன் என்று கூறியிருக்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்