ரித்திகாவைப் பார்க்கும்போது சுதா மாதிரியே இருக்கு- இறுதிச்சுற்று படம் குறித்து மணிரத்னம்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாதவன் நடிப்பில், ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் படம் இறுதிச்சுற்று. படம் குறித்து பலரும் பாராட்டி வரும் நிலையில் படத்தின் இயக்குநர் சுதா கொங்கராவின் குருவும், இயக்குநருமான மணிரத்னம் படம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார், எடுத்த எடுப்பிலேயே ‘அஸிஸ்டெண்ட் இயக்குநராக இருக்கும் வரை தனது முழுத் திறமையை வெளிப்படுத்த முடியாது ஒரு இயக்குநராக மாறி தனியாகப் படமெடுக்கும் போதுதான் முழு திறமையை வெளிப்படுத்த இயலும் எனக் கூறியுள்ளார் மணிரத்னம்.

தொடர்ந்து அவர் பேசுகையில், இதுவரை தமிழில் ஒரு பாக்ஸிங் அடிப்படையிலான முழுமையான படத்தை  இப்போது தான் பார்க்கிறேன். எனக்குத் திருப்தியாக இருந்தது. திரைக்கதையில் நல்ல தெளிவு, கமர்ஷியல் வகையிலும் சரி, எடுத்துக்கொண்ட கருவிலும் சரி எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. மாதவன் என் படத்துல நடிக்கறதுக்கு முன்னாடியே டிவி, மற்றும் விளம்பர நடிகராக இருந்தவர். தமிழில் அலைபாயுதே முதல் படம். அவ்வளவு தான். அவருக்கென தனி நடிப்பு , இருக்கிறது. என்னைப் பொருத்தமட்டில் மாதவன் இன்னும் நிறையப் படங்கள் தமிழில் நடித்தால் நன்றாக இருக்கும்.

  ரித்திகா நிறைய சுதா மாதிரியே இருக்காங்க. நடிப்பிலும் சரி, விளையாட்டு சார்ந்தும் சரி ரித்திகா சரியான உடல்வாகு மற்றும் திறமை கொண்டுள்ளார், சில இடங்களில் மிக நன்றாகவே நடித்திருந்தார். என் கிட்ட அஸிஸ்டெண்டா இருந்த போது மட்டுமல்ல சுதா இப்பவும் அப்படியே ரித்திகா மாதிரி தான் இருக்கிறார்.

மிகவும் தனித்தன்மையானவர் சுதா. அப்படித்தான் ரித்திகாவும் எனக்குத் தெரிந்தார்.

இயக்குநர்களில் ஆண், பெண் எனப் பிரித்துப்பார்க்கும் எண்ணத்தில் எனக்கு உடன் பாடில்லை. இயக்கம் இயக்கம் தான். நான் படம் பிடிச்சிருக்கா இல்லையா என்று தான் நான் பார்ப்பேன். ஒரு பார்வையாளனா படம் சூப்பர். பாடல்கள் சந்தோஷ் கிட்ட ஒரு தனி இசை நுணுக்கம் இருக்கு இந்தப் படத்திலும் அதை நிரூபித்திருக்கிறார்.

நான் படத்தை ஒரு இயக்குநராக , தொழில்நுட்ப நுணுக்கங்கள் இப்படியெல்லாம் பார்க்க மாட்டேன். ஒரு பார்வையாளனா மட்டும் தான் பார்ப்பேன். அப்படிப் படம் பார்க்கும் போது எனக்கு ரொம்பவே முழுமையான ஒரு படம் இது. தமிழ் சினிமாவில் புதுமையான படங்களை வரவேற்பதை நாம் ஏன் ஆச்சர்யமாக பார்க்க வேண்டும்.

பாலசந்தர், பாலுமகேந்திரா, மகேந்திரன் எல்லாரும் புதுமையான நிறையப் படங்கள் கொடுத்து ஒரு பெரிய பாதை அமைச்சிட்டுப் போயிருக்காங்க. உதிரிப்பூக்கள் படத்தக் கொண்டாடின தமிழ் சினிமா. அவங்க எப்பவுமே புதுமையான விஷயங்கள ரொம்ப அழகா ஏத்துக்குவாங்க.

நல்ல படம் பண்ணீட்டிங்க, மொத்த குழுவும் சீக்கிரமே அடுத்த படம் குடுக்கணும், அது தான் என் ஆசை எனக் கூறியுள்ளார் மணிரத்னம்

வீடியோவிற்கு: 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!