இறைவி படம் பற்றிப் பரவிய திடீர்வதந்தி

 கார்த்திக்சுப்புராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி எஸ்.ஜே.சூர்யா, பாபிசிம்ஹா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் இறைவி. இந்தப்படத்தின் வேலைகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இந்தப்படம் மார்ச் 25 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது என்று செய்திகள் வந்தன. இச்செய்திகள் வரத்தொடங்கியதும் தயாரிப்புநிறுவனம் உடனடியாக அதை மறுத்திருக்கிறது.

இறைவி படத்தைத் தயாரித்த நிறுவனங்களில் ஒன்றான ஸ்டுடியோகிரீன் நிறுவனம், இறைவி படத்தின் வெளியீடு தொடர்பாக வெளிவரும் வதந்திகளை நம்பாதீர்கள். படவெளியீடு எப்போதென விரைவில் நாங்களே அறிவிப்போம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

இறைவி தொடர்பான செய்திக்கு இவ்வளவு வேமாக மறுப்புச் சொல்லவேண்டிய அவசியம் என்ன? ஏனெனில், விஜய்சேதுபதி நடிப்பில் வருகிற 19 ஆம் தேதி சேதுபதி படம் வெளியாகிறது. இப்படம் வெளியாகி இருபதுநாட்கள் கழித்து மார்ச் 11 ஆம் தேதி அவர் நடித்திருக்கும் காதலும்கடந்துபோகும் படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

அப்படம் வெளியாகி இரண்டு வாரங்களில் இறைவி வருகிறது என்று செய்திகள் வந்தால் அந்தப்படத்தின் வசூல் பாதிக்கப்படும். இதனால்தான் வேகமாக இறைவி தொடர்பான வதந்திகளை நம்பாதீர்கள் என்று வேகமாக மறுத்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. 

 
 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!