போக்கிரிராஜா தள்ளிப்போக விஜய் காரணமா?

 விஜய் நடித்த புலி படத்தைத் தயாரித்த பி.டி.செல்வகுமார் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் போக்கிரிராஜா. ராம்பிரகாஷ்ராயப்பா இயக்கத்தில் ஜீவா ஹன்சிகா நடிப்பில் தயாராகியிருக்கும் அந்தப்படத்துக்கு விநியோகஸ்தர்கள் தடை விதித்ததாகச் செய்திகள் வந்தன.

அதற்குக்காரணம் புலி படத்தால் பல விநியோகஸ்தர்கள் பெரியநட்டம் அடைந்ததாகவும் அதற்கு நட்டஈடு கேட்டதற்கு இதுவரை தயாரிப்பாளர் தரப்பில் எவ்வித பதிலும் இல்லை என்கிற காரணத்தால் இந்தத்தடை என்று சொல்லப்பட்டது.

இதுபற்றி படத்தின் தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமாரிடம் கேட்டால், இதுவரை எங்களுக்கு அப்படி எந்தத் தகவலும் இல்லை, நாங்கள் ஏற்கெனவே திட்டமிட்டபடி மார்ச் 4 ஆம் தேதி படத்தை வெளியிடும் வேலைகளில் இருக்கிறோம் என்று சொன்னார்.

அதற்குள் இப்படி ஒரு செய்தி எப்படி வந்தது? என்று விசாரித்தால், இந்தப்படத்தை முதலில் பிப்ரவரி 26 ஆம் தேதி படத்தை வெளியிடத் திட்டமிட்டிருந்தார்கள். அந்தத் தேதியில் படத்தை வெளியிடவேண்டாம் என்று விநியோகஸ்தர்கள் தரப்பிலிருந்து கோரிக்கை வைக்கப்பட்டதாகத் தெரிகிறது. அதை இவர்கள் மறுத்துவிடக் கூடாது என்பதற்காகவே இப்படி ஒரு செய்தி பரப்பப்பட்டது என்று சொல்லப்படுகிறது.

இதனால் பதறிப்போன தயாரிப்பாளர் தரப்பு படத்தை ஒரு வாரம் தள்ளிவைத்துவிட்டது என்று சொல்கிறார்கள். திரையுலகில் நடக்கும் அரசியல் நிஜ அரசியலையே மிஞ்சிவிடும் போலிருக்கிறது. என்று ஆச்சரியமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!