வெளியிடப்பட்ட நேரம்: 17:54 (17/02/2016)

கடைசி தொடர்பு:18:08 (17/02/2016)

வெளியானது சிவகார்த்திகேயன் படத்தின் தலைப்பு!

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படத்திற்கு தலைப்பு ரெமோ என வைக்கப்பட்டுள்ளது. பிசி,ஸ்ரீராம் ஒளிப்பதிவில், அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் சில மாதங்களுக்கு முன்பு துவங்கி நடந்து வந்தது.

இன்று சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு மாலை ஆறு மணிக்கு படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. படத்திற்கு ரெமோ என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கபட்டுள்ளது.

இந்தப் பெயர் அந்நியன் படத்தில் விக்ரமின் ஸ்டைலிஷான கேரக்டர் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் ரெமோ என்றாலே ட்ரெண்டான, யூத் ரொமாண்டிக் என ஏற்கனவே அந்நியன் படம் உருவாக்கி வைத்துள்ள நிலையில் சிவகார்த்திகேயன் படத்திற்கு இத்தலைப்பு வைக்கப்பட்டுள்ளது பலரையும் எதிர்பார்ப்பில் ஆழ்த்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்