சட்டமன்றத் தேர்தலில் பங்கெடுக்கும் நடிகர்சங்கம் | Nadigar sangam supports Tamilnadu election

வெளியிடப்பட்ட நேரம்: 13:12 (23/02/2016)

கடைசி தொடர்பு:14:14 (23/02/2016)

சட்டமன்றத் தேர்தலில் பங்கெடுக்கும் நடிகர்சங்கம்

 தேர்தல் காலங்களில் சுமார் மூன்று மாதங்களுக்கு மேல் நாடகங்கள் போடுவதற்கு உள்ளூர் நிர்வாகத்தினர் அனுமதி கொடுப்பதில்லை.

அதனால் அதையே வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் நாடக நடிகர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதைக் கணக்கிலெடுத்துக்கொண்டு தேர்தல்ஆணையரை நடிகர்சங்கம் சார்பில் பொன்வண்ணன் தலைமையில் இன்று சந்தித்தனர்.

அப்போது தேர்தல்ஆணையத்தின் சார்பில், நாடகம் நடத்தக்கூடாது என்று தடை எதுவும் இருக்காது அப்படி இருந்தால் உள்ளூர் நிர்வாகத்திடம் அதுபற்றிக் கேட்கிறோம் என்று சொன்னார்களாம்.

அதோடு, தேர்தல் காலத்தில் மக்களிடத்தில், தேர்தலில் மக்கள் முழுமையாகப் பங்கேற்கவேண்டும் என்பதற்காக பரப்பரையைச் செய்யவேண்டும், எவ்வளவுதான் நாங்கள் அதுபற்றிப் பேசினாலும் நடிகர்கள் பேசினால் அது மக்களுக்கு மிகவேகமாகப் போய்ச்சேரும் எனவே நீங்கள் எங்களுக்கு அதைச் செய்து தரவேண்டும் என்று தேர்தல் ஆணையம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாம்.

அதை நாங்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டோம், நடிகர்களாக எங்களுடைய வேலையை மட்டும் செயதுகொண்டிருப்பதற்கு மத்தியில் மக்கள் பணியாற்றக் கிடைத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்வோம் என்கிறார் பொன்வண்ணன்.     

 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்