வெளியிடப்பட்ட நேரம்: 14:16 (23/02/2016)

கடைசி தொடர்பு:14:37 (23/02/2016)

சந்தானம் இடத்தைப் பிடிப்பாரா ஆர்.ஜே.பாலாஜி?

ஜி.வி,.பிரகாஷ் ஹீரோ அவதாரம் எடுத்தாலும் எடுத்தார் வரிசையாகப் படங்களில் ஹீரோவாக ஒப்பந்தம் ஆகிவிட்டார், இந்த வருடம் மட்டும் பென்சில், புரூஸ் லீ, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, என மூன்று படங்கள் வெளியாகும் எனத் தெரிகிறது.

இது தவிர்த்து ராஜேஷ் இயக்கத்தில் ஒரு காமெடிப் படத்திலும் நடிக்கவிருக்கிறார், படத்திற்கு தலைப்பாக ’கடவுள் இருக்கான் குமாரு’ என வைக்கப்பட்டுள்ளது. நிக்கி கல்ராணி, அவிகா கோர், நாயகிகளாக நடிக்கவிருக்கின்றனர்.

படத்திற்கு இசை ஜி.வி.பிரகாஷ் குமார், மங்காத்தா படத்திற்கு ஒளிப்பதிவு செய்த சக்தி சரவணன் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். இப்போது இப்படத்தின் புதிய அப்டேட்டாக ராஜேஷ் படமென்றாலே சந்தானம் என்ற வரலாற்றை உடைக்கும்படி காமெடியனாக ஆர்.ஜே.பாலாஜி நடிக்கவிருக்கிறார்.

நானும் ரவுடிதான் படத்தில் தனது தனித்தன்மையான டைமிங் காமெடியில் மிரட்டிய பாலாஜி இந்தப் படத்திலும் ஒப்பந்தம் ஆகியுள்ளார். படத்தைத் தயாரிக்கிறார் அம்மா கிரியேஷன்ஸ் டி சிவா.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்