கார்த்தி படத்தில் அனிருத்

அனிருத் தொடர்ந்து வெற்றிப் படங்களில் பணிபுரிந்து வருகிறார்.சமீபத்தில் காதலர் தினத்தன்று வெளியான அவரது ஆல்பம் ஒன்றும் இளைஞர்கள் இடையே பிரபலமாகி வருகிறது. இதன் தொடர்ச்சியாக அவர் இப்போது நாகார்ஜுன், கார்த்தி, தமன்னா,ஆகியோர் நடிக்க பி. வம்சி இயக்கும், கோபி சுந்தர் இசை அமைக்கும் , பி வி பி சினிமா தயாரிக்கும் 'தோழா' படத்தில் டைட்டில் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்.

'தோழா' இரு வெவ்வேறு வாழ்க்கை முறைகளில் இருந்து வரும் இரு நண்பர்களைப் பற்றிய கதை.அந்த நடப்பைப் பிரதிபலிக்கும் பாடல் ஒன்றை தலைப்புப் பாடலாகப் பதிவு செய்ய எண்ணினோம்.

அந்தப் பாடலை அனிருத் பாடினால் நன்றாக இருக்கும் என இயக்குனரும் , இசை அமைப்பாளரும் முடிவெடுத்தார்கள்.உடனே அனிருத்தை அணுகினோம், அவரும் சற்றும் தயக்கம் இன்றி ஒப்புக் கொண்டார்.

'தோழா என் உயிர் தோழா' என்று தொடங்கும் இந்தப் பாடல் , இனி வரும் காலங்களில் தோழமையைக் குறிக்கும் பாடலாக இருக்கும் என்பதில் நம்பிக்கையாக இருக்கிறோம். என்று 'தோழா' படக்குழுவினர் சொல்கின்றனர். இந்த மாதம் 26 ஆம் தேதி இப்படத்தின் பாடல்கள் வெளியாகவிருக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!