தனுஷ் தயாரிப்பில் இளையராஜா! | Dhanush's 'Amma Kanakku' wrapped up in 50 days

வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (24/02/2016)

கடைசி தொடர்பு:20:15 (24/02/2016)

தனுஷ் தயாரிப்பில் இளையராஜா!

ந்தியில் அஸ்வினி ஐயர் என்ற இயக்குநர் இயக்கிய திரைப்படமே “நில் பேட்டே சனாட்டா”. இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கி, தயாரித்துவருகிறார் தனுஷ்.

தமிழில் ‘அம்மா கணக்கு’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் அம்மா - மகள் இருவருக்குமிடையேயான பாசம் சார்ந்த திரைக்கதையை மையமாகக் கொண்டது. இப்படத்திற்கான படப்பிடிப்பு ஜனவரி 6ல் தொடங்கி நேற்றுடன் (பிப்ரவரி 23ல்) முடிவடைந்தது. மிக குறுகிய காலத்தில் படப்பிடிப்பை விரைந்து முடித்திருக்கிறது படக்குழு.

இந்தியில் இயக்கிய அஸ்வினி ஐயர் தான் தமிழிலும் இயக்கிவருகிறார். இப்படத்தில் அம்மா - மகளாக ரேவதியும் அமலாபால் இருவரும் நடித்துவருகிறார்கள். சமுத்திரகனி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

இளையராஜா இசையமைக்கவிருக்கும் இப்படம் ஏப்ரல் மாதம்  வெளியாகுமென்று தனுஷ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்