வெளியிடப்பட்ட நேரம்: 12:48 (25/02/2016)

கடைசி தொடர்பு:13:08 (25/02/2016)

சூர்யா இடத்தைப் பிடித்த கார்த்தி

 நட்டிஎன்கிற நட்ராஜ் கதாநாயகனாக நடித்த சதுரங்கவேட்டை படத்தை இயக்கியவர் வினோத். அந்தப்படம் 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியாகி வெற்றி பெற்றது.

அதன்பின் அப்பட இயக்குநர் வினோத், சூர்யாவுக்கு ஒரு கதை சொல்லியிருக்கிறார், அவருடைய அடுத்தபடத்தில் சூர்யாதான் கதாநாயகன் என்று சொல்லப்பட்டது. இரண்டாவது படத்திலேயே சூர்யாவைப் பிடித்துவிட்டார் என்று அவரைப் பற்றி ஆச்சரியமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

ஆனால் அது பேச்சோடு நின்றுபோனது, நடக்கவில்லை. இப்போது வினோத் இயக்கும் புதியபடத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

கார்த்தி இப்போது, கஷ்மோரா படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்தப்படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் புதியபடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். அந்தப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கும் என்று சொல்லப்படுகிறது.

அந்தப்படத்தை முழுமையாக முடித்துவிட்டு வினோத் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறாராம். இந்தப்படத்தை பிரபு தயாரிக்கவிருக்கிறார் என்று சொல்கிறார்கள்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்