Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தயாரிப்பாளராக மாறிய அருண்விஜய்!

அஜித்துடன் என்னை அறிந்தால் படத்தில் வில்லன் ரோலில் நடித்து ஓவர் நைட்டில், நெக்ஸ்ட் இன்னிங்ஸ் விளையாட ஆரம்பித்தவர் அருண்விஜய். அடுத்தக் கட்டமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார்.

ஈரம், வல்லினம் மற்றும் ஆறாது சினம் உள்ளிட்ட படங்களை இயக்கிய தேசிய விருது பட இயக்குநர் அறிவழகன் இயக்கவிருக்கும் படத்தில் ஹீரோவாக அருண்விஜய் நடிக்கவிருக்கிறார். இப்படத்தை அருண்விஜய்யின்  ஐஸ்-இன் சினிமாஸ் எண்டெர்யின்மெண்ட் (Ice-In Cinemas Entertainment) நிறுவனம் தான் தயாரிக்கிறது.

 

தயாரிப்பு நிறுவனம் தொடங்கியவுடன் பல இயக்குநர்களிடம் கதைகேட்டிருக்கிறார் அருண்விஜய். தவிர்க்கமுடியாத அளவுக்கு, இந்தப் படத்தை தயாரித்தே தீரவேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்கியது அறிவழகன் சொன்னகதைதானாம், உடனே ஓகே சொன்ன அருண்விஜய் படத்தின் ஆரம்பக்கட்ட வேலைகளில் இறங்கியிருக்கிறாராம்.

தனுஷ், சூர்யா, விஷால் என்று நடிகர்களே தயாரிப்பாளர்களாக மாறிவரும் கலாச்சாரத்தில் அருண்விஜய்யும் இணைந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
[X] Close