சூரியிடம் 5 கோடி கேட்கும் சிவகார்த்திகேயன் - கலாட்டா ஆரம்பம் | Soori tweets about his mother's First flight trip

வெளியிடப்பட்ட நேரம்: 10:55 (01/03/2016)

கடைசி தொடர்பு:11:09 (01/03/2016)

சூரியிடம் 5 கோடி கேட்கும் சிவகார்த்திகேயன் - கலாட்டா ஆரம்பம்

சிவகார்த்திகேயன், சூரியின் நட்பு சினிமாவைத் தாண்டியும் தொடரும் என்பது நாமறிந்தே. மேலும் சிவகார்த்திகேயன் , சூரியுடன் இணைந்து நடித்த படங்கள் மெகா ஹிட்டானதும் நமக்குத் தெரியும்.கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், மற்றும் ரஜினிமுருகன் என அனைத்தும் வசூலைக் குவித்த படங்கள்.

இந்நிலையில் சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் தனது அம்மாவின் முதல் விமானப் பயணம் குறித்து பகிர்ந்துள்ளார். “ அம்மாவின் முதல் விமான பயணம். என்னதான் இருந்தாலும் நம்மூரு பஸ் மாதிரி வராதுப்பானு அம்மா சொல்ல, பைலட்டே தெறிச்சிட்டாரு என ட்விட்டரில் கூறியிருந்தார்.

இதற்கு சிவகார்த்திகேயன் பதில் ட்வீட்டில் “ சூப்பர் பங்கு, அடுத்து ரஜினிமுருகன் ஏர்வேஸ் ஆரம்பிக்கிறோம், திஸ் டைம் 5 கோடி வாங்கித் தாங்க” என ஜாலியாகக் கூற ரசிகர்கள் உற்சாகமாகப் பதிலளித்து வருகிறார்கள். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்