டிகாப்ரியோவுக்கும் விஜய், அஜித்துக்கும் என்ன சம்மந்தம்? - ரசிகர்கள் ரகளை! | Vijay, Ajith Fans fights on Leonardo Dicaprio's Oscar award

வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (01/03/2016)

கடைசி தொடர்பு:14:59 (01/03/2016)

டிகாப்ரியோவுக்கும் விஜய், அஜித்துக்கும் என்ன சம்மந்தம்? - ரசிகர்கள் ரகளை!

இருப்பத்தி மூன்று வருடங்கள் கழித்து ஐந்து முறை பரிந்துரைக்கப்பட்டு ஐந்தாவது முறைதான் லியோனார்டோவுக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. இந்நிலையில் சமூக வலைதள வாசிகள் தங்கள் சிந்தனைகளைத் தூண்டி லியோனார்டோவை பாராட்டி மீம்ஸ்களைக் கொட்டத் துவங்கிவிட்டனர். ஒருபக்கம் வழக்கம் போல் நம் உள்ளூர் படங்கள் மற்றும் நடிகர்களுடன் ஒப்பிட்டு மீம்ஸ்கள் கமெண்டுகளும் அதிகரிக்கத் துவங்கியுள்ளன.

இதில் சிறப்பான விஷயம் எப்பவும் போல் விஜய் அஜித் ரசிகர்களின் சண்டை. திடீரென வாட்ஸப், முகநூல் என விஜய் , அஜித்துடன் டிகாப்ரியோவை ஒப்பிட்டு இவர்களைக் கிண்டலடித்து மாறி மாறி மீம்ஸ்கள் பரவத் துவங்கியுள்ளன. ஒரு பக்கம் கரடியுடன் சண்டையிட்ட டிகாப்ரியோவுக்கே ஆஸ்கர்னா கருஞ்சிறுத்தையோட சண்டை போட்ட நம்ம விஜயண்ணாவுக்கு என்ன கிடைக்கும், என அஜித் ரசிகர்கள் ஒரு பக்கம் விஜய்யையும், இன்னொரு பக்கம் விஜய் ரசிகர்கள் அஜித்தையும் கிண்டல் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

முன்பெல்லாம் நம்மூரில் ஒரு பிரச்னை என்றால் மட்டும் தான் இந்த இரு அணியினரும் சம்மந்தமே இல்லாமல் சம்மந்தப் படுத்திக் கொண்டு சண்டையிடுவார்கள் இப்போது அமெரிக்காவில் நடக்கும் பிரச்னைக்குக் கூட இவர்கள் இணையத்தில் சண்டையிட்டுக் கொள்வது ட்ரெண்டாகிவிட்டது.

இப்படியே போய்க்கொண்டிருந்தால் லெமூரீயாக் கண்டத்தில் நடக்கும் பிரச்னைக்குக் கூட விஜய் அஜித் ரசிகர்கள் இணையத்தில் சண்டை போட்டுக்கொள்வார்கள். இதைத் தடுக்க ஒரே வழி அவர்களாக பார்த்து உணர்ந்து புரிந்து கொண்டால் மட்டுமே சாத்தியம். இந்தக் கட்டுரைக்குக் கூட கண்டிப்பாக இரு ரசிகர்களும் இணைந்து சாடிக்கொள்வது மட்டும் உறுதி.  நம்மையும் திட்டுவார்கள். “ இதெல்லாம் பாவம் மை சன்” எனச் சொல்வதைத் தவிர நம்மிடம் பதில் ஏதுமில்லை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்