பெரிய பெரிய ஆர்மி டாங்க்ஸ், பிரமாண்ட மொபைல் ஷோரூம்- எந்திரன் 2 அப்டேட்ஸ் | Military tanks and mobile phone crisis in 2.0

வெளியிடப்பட்ட நேரம்: 16:47 (02/03/2016)

கடைசி தொடர்பு:16:54 (02/03/2016)

பெரிய பெரிய ஆர்மி டாங்க்ஸ், பிரமாண்ட மொபைல் ஷோரூம்- எந்திரன் 2 அப்டேட்ஸ்

இயக்குநர் ஷங்கர் என்றாலே பிரம்மாண்டம். அதற்கு ஏற்றார் போல 2.O படத்தின் செலவுகளும் , செட்டிங்குகளும் கணக்கிட்டால் நமக்கு தலை சுற்றல் வந்துவிடும் போல என நெருங்கிய வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.

இதுவரை இல்லாத அதீத பட்ஜெட்டில் 2.O படம் தயாராகிவருகிறது. ரஜினிகாந்த, எமி ஜாக்சன் நடிக்கும் இந்தப் படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். இப்படத்தின் ஷூட்டிங்கிற்காக சமீபத்தில் படக்குழு பெரிய ஆர்மி டேங்குகளை வாங்கியுள்ளனர். மேலும் சென்னைக்கு வெளியில் மிகப்பெரிய மொபைல் ஷோரும் செட் அமைக்கப்பட்டுள்ளது.

ஆர்மி டேங்குகள் இரவில் நடக்கும் ஒரு பிரம்மாண்ட சண்டைக் காட்சிகளுக்காகவும், மொபைல் ஷோரும் பல இளைஞர்கள் ஒன்றிணைந்து ஒரே நேரத்தில் மொபைல் வாங்குவது போலவும் காட்சி ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. பெரும் பட்ஜெட்டில் தமிழ் சினிமாவையே எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ள இப்படத்தில் விரைவில் வில்லன் அக்‌ஷய் குமாரின் பகுதிகள் படமாக்கப்பட உள்ளன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்