கமல், ரஜினி கலந்துகொள்வார்களா? எதிர்பார்ப்பில் நடிகர்கள்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் கடந்த அக்டோபர் மாதம் நடத்தப்பட்டு விஷால் அணியினர் வெற்றி பெற்றனர். ஐந்து முறை செயற்குழுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, சில முடிவுகள் எடுக்கப்பட்ட நிலையில், பொதுக்குழு வருகிற 20ம் தேதி கூடுவதாக அறிவித்துள்ளனர்.

நேற்று, நடிகர் சங்க வளாகத்தில் நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், அறங்காவலர்கள் ஐசரி கணேஷ், குட்டி பத்மினி ஆகியோருடன் சங்க நிர்வாகிகள் அஜய் ரத்தினம், ஸ்ரீமன், விக்னேஷ், பசுபதி, ரோகிணி, லலிதகுமாரி,சங்கீதா, சோனியா மற்றும் பலர் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்த முடிவு அறிவிக்கப்பட்டது.

முதல் பொதுக்குழு என்பதால், ரஜினி, கமல், அஜித், விஜய் உட்பட அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு அனுப்பப்பட உள்ளது. நாடக நடிகர்கள், முன்னணி நடிகர், நடிகையர் அனைவரும் கலந்து கொள்ள ஏதுவாக அன்றைய தினம் படப்பிடிப்புகளும் ரத்து செய்யும்படி, தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு நடிகர் சங்கம் மூலமாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

 

பொதுக்குழுவில் சங்கத்திற்கு கட்டிடம் கட்டுவது பற்றிய முக்கியத் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய பொறுப்பாளர்கள் இன்னும் கணக்குகளை ஒப்படைக்கவில்லை என்பதும் விவாதிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. 

பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படவிருக்கிற பொதுக்குழு என்பதால் கமல், ரஜினி உட்பட அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று விருப்பப்படுகிறார்கள். அவர்கள் வருவார்களா?

 

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!