தனிக்காட்டுராஜா பெயர் மாற்றத்துக்குக் காரணம் விக்ரம்பிரபு?

 ரஜினி நடிப்பில் கடந்த 1982-ஆம் ஆண்டு வெளிவந்த ‘தனிக்காட்டு ராஜா’ படத்தின் தலைப்பு, ஆர்யா நடிக்கப் போகும் புதிய படத்துக்கு வைக்கப்போவதாக  செய்தி பரவியது. 

 

 

மேலும் அவர்கள் கூறும்போது, இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 10-ம் தேதி தொடங்குகிறதாம். இதற்காக திண்டுக்கல் அருகே உள்ள தாண்டிக்குடி என்ற கிராமத்தில் 100 ஏக்கர் நிலத்தை வாடகைக்கு எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.

ஏன் இந்த அறிவிப்பு? என்ன நடந்தது? 

மஞ்சப்பை படத்தையடுத்து இயக்குநர் ராகவன் , விக்ரம்பிரபுவை கதாநாயகனாக வைத்து படம் இயக்குவதாக இருந்ததாம். அப்போது இந்தக் கதைக்கு தனிக்காட்டுராஜா என்கிற பெயர் பொருத்தமாக இருக்கும் என்று முடிவு செய்தார்களாம். உடனே  ரஜினி படத்தயாரிப்பு நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு அந்தப் பெயரை வாங்கிக் கொடுத்தாராம் விக்ரம்பிரபு. ஆனால், சில காரணங்களால் அந்தப் படத்தில் விக்ரம்பிரபு நடிக்கவில்லை.

அதன்பின் அந்தக்கதையில் நடிக்க ஒப்பந்தமானார் ஆர்யா. அதே கதை என்பதால் படத்தின் பெயரும் அதுவாகத்தான் இருக்கும் என்று எல்லோரும் நினைத்துவிட்டார்கள். ஆனால், இயக்குநரோ, விக்ரம்பிரபு விரும்பி வாங்கிக் கொடுத்த அந்தப் பெயரை அவர் இல்லாத நிலையில் பயன்படுத்த விரும்பவில்லை என்று சொல்லிவிட்டதாகத் தெரிகிறது. 

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!