வெளியிடப்பட்ட நேரம்: 13:48 (03/03/2016)

கடைசி தொடர்பு:15:28 (03/03/2016)

சரத்குமார் மீது காவல்துறையில் புகார், பண மோசடி குற்றச்சாட்டு

தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக இருந்த சரத்குமார் பலகோடி ரூபாய் ஊழல் செய்ததாக  சென்னை காவல் துறை ஆணையரிடம் நடிகர் சங்கம் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சங்க அறக்கட்டளை உறுப்பினர்கள் சார்பில் சரத்குமார் உள்ளிட்ட நடிகர் சங்க முன்னாள்  நிர்வாகிகள் மீது நடிகர் சங்கம் தொண்டு நிறுவனத்தின் அறங்காவலரான பூச்சி முருகன் இந்த  புகார் மனுவை அளித்துள்ளார்.

 இந்த மனுவில் நடிகர் சங்க செயலாளர் விஷால்  கையொப்பமிட்டுள்ளார். இந்த புகார் மனு சிறப்பு ஆடிட்டரின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க