காயத்ரி மந்திரத்தை தவறாகச் சித்தரிக்கிறதா பிச்சைக்காரன் பாடல்?

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சத்னா டைடஸ் நடிப்பில் மார்ச் 4ம் தேதி வெளியாகவிருக்கிறது ‘பிச்சைக்காரன்’. இந்தப் படத்தில் காயத்ரி மந்திரத்தை தவறாகப் பயன்படுத்தியுள்ளதாக பிராமணர்கள் தரப்பிலிருந்து சர்ச்சை உருவாகியுள்ளது.

‘பிச்சைக்காரன்’ திரைப்படத்தில் வரும் பாடலில் காயத்ரி மந்திரம் குறித்து தவறாகச் சித்தரித்து பாடப்பட்டுள்ளது என்று கோவை போலீஸ் கமிஷனரிடம் அகில பாரத பிராமணர் சங்கத்தினர் மனு அளித்துள்ளனர் . ஏற்கனவே இதே படத்தில் இன்னொரு பாடலில் மருத்துவர்களின் இட ஒதுக்கீடு குறித்து தவறாகப் பாடல் வரிகளில் குறிப்பிட்டுள்ளதாக ஒரு சர்ச்சை எழுந்தது.

அதில், 'பாழாப்போன உலகத்திலே காசு பணம் பெருசு...' எனத் தொடங்கும் அந்த பாடலில், 'கோட்டாவுல சீட்டு வாங்கி டாக்டர் ஆவுறான்'; 'தப்பு தப்பா ஊசி போட்டு சாகடிக்கிறான்' என்ற வரிகள் இடம்பெற்றுள்ளது. இந்த வரிகளுக்கு மருத்துவர்கள் சர்ச்சையைக் கிளப்பியதும் அதற்கு விஜய் ஆண்டனி தரப்பில் மன்னிப்பும் கேட்டார். தற்போது மீண்டும் இந்து மதத்தின் முக்கிய காயத்ரி மந்திரத்தை தவறாகச் சித்தரித்துள்ளதாக மனு கொடுக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!