தெறி பாடல் வெளியீட்டுவிழாவிலும் அசத்தவிருக்கும் டி.ஆர் | T Rajendar has sung a song in Vijay’s Theri

வெளியிடப்பட்ட நேரம்: 13:15 (04/03/2016)

கடைசி தொடர்பு:13:25 (04/03/2016)

தெறி பாடல் வெளியீட்டுவிழாவிலும் அசத்தவிருக்கும் டி.ஆர்

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ‘தெறி’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா வருகிற மார்ச் 20-ந் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.. விஜய்யின் ‘புலி’ படத்தின் பாடல் வெளியீட்டின் போது டி.ஆர். பேசிய ஆவேசமான பேச்சு அனைவரையும் ரசிக்க வைத்தது.

அந்த விழாவில் அவருடைய பேச்சுதான் மிகவும் ஹைலைட்டாக இருந்தது. தெறியிலும் டி.ஆரின் பங்களிப்பு இருக்கிறதாம். இந்தப் படத்தில் ஒரு துள்ளலான குத்துப் பாடலொன்றை டி.ஆர். பாடியிருக்கிறாராம். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் பாடலை ஓரிரு மணி நேரங்களில் டி.ராஜேந்தர் பாடி முடித்துக் கொடுத்துவிட்டாராம்.

அவருடைய எனர்ஜியைப் பார்த்து ஜி.வி.பிரகாஷ் வியந்து போய்விட்டாராம். ஏ.ஆர்.ரகுமான் ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட இந்த பாடல் பதிவின்போது, அட்லியும் இருந்துள்ளார். இந்தச் செய்தி வந்ததிலிருந்து, தெறி பாடல் வெளியீட்டுவிழாவுக்கும் டி.ஆர் வருவார், அவர் என்ன பேசப்போகிறார்? என்கிற எதிர்பார்ப்பும் வழக்கம் போல அசத்தப்போகிறார் என்கிற கருத்துகளும் வரத்தொடங்கிவிட்டது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்