Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜி.வி.பிரகாஷ் இப்படிச் செய்யலாமா?

2006 ஆம் ஆண்டு வெளியான வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ்குமார். முதல்படத்திலேயே உருகுதே மருகுதே என்கிற ஒரே பாடலின் மூலம் ஒட்டுமாத்த காதலர்களையும் கவர்ந்தவர். அஜீத்தின் கிரீடம், தனுஷின் பொல்லாதவன் ஆகிய படங்களிலும் பணியாற்றி எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்ததன் விளைவு, 2008 இல் பாலச்சந்தர் தயாரிப்பில் ரஜினி நடித்த குசேலன் படத்துக்கு இசையமைப்பாளரானார்.

"ஷூட்டிங்ல நான் உட்கார்ந்திருக்கேன், ஒரு சின்னப்பையன் எங்கிட்ட வந்து நின்னுகிட்டிருக்கான், இந்தப்பயைன் ரொம்ப நேரமா இக்யே நிக்கிறானே யாரும் அவனை இங்கிருந்து போகச் சொல்லமாட்டேங்கிறாங்களேன்னு நினைச்சுகிட்டு உட்கார்ந்திருக்கேன், அப்புறம் டீம் வந்து இவர்தான் நம்ம படத்துக்கு மியூசிக் டைரக்டர்னு சொன்னாங்க, எனக்கு ஆச்சரியம், இவ்வளவு சின்னவயசுல இவ்வளவு பெரிய உயரத்தை அடைஞ்சிருக்கார் வாழ்த்துகள்” ....என்று குசேலன் பாடல் வெளியீட்டுவிழாவில் ரஜினி பேசினார்.

அங்காடித்தெரு, மதராசபட்டிணம், ஆடுகளம், தெய்வத்திருமகள், தாண்டவம் உட்பட தான் இசையமைத்த எல்லாப்படங்களிலும் தன்னுடைய முத்திரையைப் பதித்து பாராட்டுகளைப் பெற்றவர். பாரதிராஜா, பாலா போன்ற தமிழின் முக்கியமான இயக்குநர்கள் தங்கள் படத்துக்கு இவரை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. இதற்கெல்லாம் காரணம், இவருடைய இசையில் வந்த பாடல்களுக்குக் கிடைத்த வரவேற்புகள் மட்டுமின்றி இவருடைய எளிமையான அணுகுமுறையும் கூட என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட ஜி.வி.பிரகாஷ் நடிக்க வந்தபோது, இவருக்கு ஏன் இந்த வேலை? என்று கேட்டவர்களும் உண்டு, நல்லவிசயம்தான் என்று சொன்னவர்களும் உண்டு. முதலில் அவர் நடிக்கத் தொடங்கிய படம் பென்சில். அந்தப்படம் இப்போது வரை வந்தபாடில்லை.

அவர் நடித்து முதலில் வெளியான படம் டார்லிங். ஐ, ஆம்பள ஆகிய இரண்டு படங்களோடு வந்து அப்படம் வெற்றி பெற்றதோடு ஜி.வி க்கு நற்பெயரையும் பெற்றுத்தந்தது. எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. என்ன நடந்ததோ? ஆதிக்ரவிச்சந்திரன் சொன்ன கதை ஜி.விக்கு பிடித்துப்போக த்ரிஷாஇல்லன்னாநயன்தாரா படமும் வெளியானது. வசூல் ரீதியாக நல்லவெற்றியைப் பெற்றது அந்தப்படம். ஆனாலும் நல்லபுள்ள ஜீவி, ஏன் இந்தமாதிரிப் படங்களிலெல்லாம் நடிக்குது? என்று பலர் விசனப்பட்டார்கள். அந்தப்படத்தில் இடம்பெற்ற வசனங்களை இளைஞர்கள் கொண்டாடினாலும், ஜிவியை நம்மவீட்டுப்புள்ள என்று நினைத்துக்கொண்டிருந்தவர்களை முகம்சுளிக்க வைத்துவிட்டது. அப்படம் பற்றி வந்த இதுபோன்ற விமர்சனங்களை புறங்கையால் தள்ளிவிட்டுவிட்டார் ஜிவி. வெற்றி தொடர்ந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்பது அவர் கணக்கு.

அதன்விளைவு அதே ஆதிக்ரவிச்சந்திரனின் அடுத்த படத்திலும் அவர் கதாநாயகன். அந்தப்படத்துக்கு விர்ஜின்மாப்பிள்ளை என்று பெயர் வைத்திருப்பதாகச் செய்திகள் வந்திருக்கின்றன. பெயரே இப்படி இருக்கிறதென்றால் இந்தப்படத்தின் கதை மற்றும் வசனங்கள் எப்படியிருக்கும் என்பது த்ரிஷாஇல்லன்னாநயன்தாரா படம் பார்த்தவர்களுக்கு நன்கு தெரியும். அவர் நடிக்கும் மற்ற படங்கள், புரூஸ்லி, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, கெட்டபையன்டா இந்தகார்த்தி, கடவுள்இருக்கான்குமாரு ஆகிய படங்கள் நகைச்சுவையை மையப்படுத்தி இருக்கும் என்று நம்பலாம். ஏற்கெனவே அவர் நடித்த பேய்ப்படம் வெற்றி பெற்றிருக்கிறது, அடுத்து நகைச்சுவைக்கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். இதுவே சரியான பாதை எனும்போது த்ரிஷாஇல்லன்னாநயன்தாரா பாணியிலும் அவர் படம் நடித்தால் அது பெரும்பாலோனோரின் வெறுப்புக்கு ஆளாக்கும். இது மிகவேகமான காலகட்டம். இப்போது கிடைக்கும் வெற்றிகளுக்கு நீண்டகாலமதிப்பு இல்லை. ஒரு தோல்வி வந்தால் மொத்தமும் முடிந்துபோகும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்