ஆண்பாவம் படத்தில் பாண்டியராஜனுக்கு பாட்டியாக வந்து பட்டையைக் கிளப்பியவர் தான் கொல்லங்குடி கருப்பாயி. மதுரை -தொண்டி சாலையில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த நாட்டுப்புற பாடகி. சினிமாவில் பல நாட்டுப்புற பாடல்களைப் பாடி பிரபலமானவர்.
தற்போது பரவை முனியம்மா பாணியில் இவரும் வறுமையால் வாழ்வாதாரமின்றி தவித்து வருகிறார். நலிந்த கலைஞர்களுக்கு அரசு கொடுக்கும் ஊதியமான 1500 ரூபாய் ஒரு மாதத்துக்குப் போதவில்லை என்றும் அதற்கு மனுவும் கொடுத்துள்ளார்.
இவரின் நிலையைக் கேள்விப் பட்டு நடிகர்கள் சங்க பொதுச்செயலாளர் விஷால் உதவி செய்துள்ளார். இந்தச் செய்தியை அறிந்த அடுத்த கணம், விஷால் தன் நண்பர்கள் மூலம் அவரை அணுகி தேவையான உதவிகளைச் செய்துள்ளார். இதேபோல் பரவை முனியம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை என்று கூறிய போதும் விஷால் உதவி செய்தது குறிப்பிடத்தக்கது.
சுமார் பத்து படங்களுக்கும் மேல் நடித்திருந்தும் தன்னை நடிகர் சங்க உறுப்பினராகச் சேர்க்கவில்லை என மிகவும் வருத்தமடைந்த கொல்லங்குடி கருப்பாயியை , ஒரு வாரத்துக்குள் உறுப்பினராக்கி ஆவண செய்யும் படியும் உத்தரவிட்டுள்ளார் விஷால்