கலாபவன் மணிக்கு கமல்ஹாசன் , சூர்யாவின் இரங்கல் செய்தி | kamal hassan condolence to kalabavan Mani

வெளியிடப்பட்ட நேரம்: 12:49 (07/03/2016)

கடைசி தொடர்பு:14:50 (07/03/2016)

கலாபவன் மணிக்கு கமல்ஹாசன் , சூர்யாவின் இரங்கல் செய்தி

மலையாளத்தின் பிரபலமான நடிகரான கலாபவன் மணி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்திருக்கிறார். மலையாளத்தில் நாயகனாவும், தமிழ், தெலுங்கில் குணச்சித்திரம் மற்றும் வில்லனாகவும் நடித்திருக்கிறார். தமிழில் ‘ஜெமினி’, ‘மழை’, ‘வேல்’, ‘ஆறு’,‘எந்திரன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

நுரையீரல் மற்றும் கிட்னி பிரச்சனை காரணமாக அவதிப்பட்டு அடிக்கடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கலாபவன் மணியின் உடல்நிலை மோசமாகி கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தவர், ஞாயிறு இரவு 7மணிக்கு சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.

அவரது மரணத்திற்கு பல்வேறு மலையாள ஜாம்பவான்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். இவ்வரிசையில் கமல்ஹாசன், சூர்யா உள்ளிட்ட தமிழ் நடிகர்களும் இரங்கல் செய்தியை வருத்தத்துடன் வெளியிட்டுவருகின்றனர். 

கமல், எனது நண்பர் கலாபவன் மணியின் மரணம் எனக்கு மிகுந்த வருத்தமளிக்கிறது. எனக்கிருக்கும் மலையாள சகோதரர்களில் மேலும் ஒருவர் கல்லீரல் பிரச்னையால் இறந்துவிட்டார். கலைத்துறையில் அதிக திறமைபடைத்தவர்களில் ஒருவர் கலாபவன் மணி” என்று கூறியிருக்கிறார்.

இதே போல் சூர்யா, மிகவும் திறமையான , மதிப்புக்குரிய எனது நண்பர். அவருடன் இருந்த தருணங்கள் மனதுக்கு நெருக்கமானவை. அவரது ஆத்மா அமைதி பெறட்டும் என ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

கலாபவன்மணி சமீபத்தில் கமல்ஹாசனின் பாபநாசம் படத்தில் போலீஸ் அதிகாரியாக குணச்சித்திர வேடத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்