ஏ.ஆர்.ரஹ்மான் எப்படி ஆஸ்கர் வாங்கினார் தெரியுமா? ( வீடியோ இணைப்பு) | A. R. Rahman Makes Music Out of Thin Air at CES 2016

வெளியிடப்பட்ட நேரம்: 15:31 (07/03/2016)

கடைசி தொடர்பு:15:53 (07/03/2016)

ஏ.ஆர்.ரஹ்மான் எப்படி ஆஸ்கர் வாங்கினார் தெரியுமா? ( வீடியோ இணைப்பு)

ஆஸ்கர் புகழ் ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக இரண்டு ஆஸ்கர்களை தட்டிக்கொண்டது மட்டுமின்றி தமிழில் “ எல்லாப் புகழும் இறைவனுக்கே” எனக் கூறி தமிழர்களின் தலை நிமிரச் செய்தார்.

இப்போது ஏ.ஆர்.ரஹ்மான்  இசைக்கருவிகளே இல்லாமல், உடலை வளைத்து தூக்கிக் கொண்டு இசையமைக்கும் கருவிகளோ இன்றி காற்றில் இசையமைப்பது போல் ஒரு புது தொழில்நுட்பத்தில் இசையமைத்துள்ளார், இந்த இசையமைக்கும் முறை தான் ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் ஜெய் ஹோ பாடலிலும் பயன்படுத்தப்பட்டுள்ளதாம்.

இண்டெல் கியூரீ பேஸ்ட் டெக்னாலஜியில் இசையமைத்துள்ளார். இதில் ஒரு கையில் பிளாஸ்டிக்காலான ஒரு பேண்ட் போன்று மாட்டிக்கொண்டு காற்றில் கையசைத்தபடி இசையமைக்கிறார்கள். லைவ் ஷோவில் வெறுமனே ஆட்கள் மட்டுமே, மேடையில் இருக்கலாம், மேலும் இசைக்கருவிகள் நகர்ந்து இடையூறு கொடுப்பதோ, கனமான கருவிகளைத் தூக்கிக் கொண்டு கையாளும் வேலையும் இனி இல்லை என ஏ.ஆர்.ரஹ்மான் தனது அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார்,

வீடியோவுக்கு:

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்