இறுதிச்சுற்று கதையை மாற்றச் சொன்ன கதாநாயகன் | Iruthi suttru to remade in Telugu with Venkatesh

வெளியிடப்பட்ட நேரம்: 12:36 (08/03/2016)

கடைசி தொடர்பு:12:45 (08/03/2016)

இறுதிச்சுற்று கதையை மாற்றச் சொன்ன கதாநாயகன்

  சுதாகொங்கரா இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இறுதிச்சுற்று படத்தைத் தெலுங்கிலும் எடுக்கவிருக்கிறார்கள்.

 

அந்தப்படத்தைப் பார்த்தவுடனேயே இதில் நான் நடிக்கிறேன் சுதாவே இயக்கட்டும் என்று சொல்லிவிட்டார் தெலுங்கின் முன்னணிநடிகர்களில் ஒருவரான வெங்கடேஷ். அவர் ஏற்கெனவே நடிப்பதாக ஒப்புக்கொண்டிருந்த படத்தைத் தள்ளிவைத்துவிட்டு முதலில் இந்தப்படத்தைத் தொடங்கத் திட்டமிட்டிருக்கிறாராம்.

இதற்கான திரைக்கதை அமைக்கும் வேலைகள் நடந்துகொண்டிருக்கிறதாம். ஏற்கெனவே இருக்கிற திரைக்கதைதானே இதில் புதிதாகச் செய்ய என்ன இருக்கிறது?

நாம் பார்த்த இறுதிச்சுற்று படத்திலிருந்து சில விசயங்களை மாற்றச் சொல்லியிருக்கிறாராம் வெங்கடேஷ். இந்தப்படத்தில் மாதவனின் மனைவி ஓடிப்போயிருப்பார். மாதவன் பல பெண்களுடன் தொடர்பில் இருக்கிறவர் என்னும் பொருள்பட அவரைப் பொம்பளபொறுக்கி என்றெல்லாம் சொல்வார்கள்.

இவற்றை மொத்தமாக வெங்கடேஷ் மாற்றச் சொல்லிவிட்டதாகத் தெரிகிறது. அதை அப்படியே வைத்தால் அவருடைய மதிப்பு குறையும் என்பதால், அவருக்கு அன்பான மனைவி அவரை வெங்கடேஷ் உருகி உருகிக் காதலிக்கிறார் என்பது போல மாற்றச் சொல்லியிருக்கிறாராம்.

முதலில் இதை ஏற்றுக்கொள்ள மறுத்த இயக்குநர் அதிலுள்ள நியாயத்தைப் புரிந்து மாற்றத்துக்கு ஒப்புக்கொண்டு அதைச் செய்துகொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்