மறுபடியும் அம்மாவாக நடிக்க நயன்தாரா ஒப்புக்கொண்டது ஏன்?

 நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் புதிய படத்தினை முதல் பிரதி அடிப்படையில் இயக்குனர் சற்குணத்தின் தயாரிப்பு நிறுவனமான சற்குணம் சினிமாஸ் தயாரிக்கிறது.

இப்படத்தை இயக்குனர் சற்குணமிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய தாஸ் ராமசாமி எழுதி இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் நடிகை நயன்தாரா முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார். இப்படத்தின் கதை கதாநாயகியை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது. தம்பி ராமையா, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். படத்தின் ஒளிப்பதிவை தினேஷ் கிருஷ்ணன் மேற்கொள்கிறார். படத்திற்கு இசை விவேக் மெர்வின்.
 
நகைச்சுவை கலந்த திகிலூட்டும் கிரைம் திரில்லராக இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் கவரும் வண்ணம் ஜனரஞ்சகமான முறையில் இப்படம் எடுக்கப்படவுள்ளது என்று தயாரிப்பு நிறுவனம் சொல்லியிருக்கிறது. இப்படத்தின் முதல்கட்டப்படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாம்.
 
மாயா படத்தைப் போலவே இந்தப் படத்திலும் ஒரு குழந்தைக்குத் தாயாக நடிக்கிறாரம் நயன்தாரா. இந்தப்படத்தில் அந்தக்குழந்தைதான் பேய் என்றும் சொல்லப்படுகிறது.
 
2009 ஆம் ஆண்டு வெளியான  ஆர்பன் என்கிற ஆங்கிலப்படத்தைத் தழுவியே இந்தப்படம் எடுக்கப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது. இது உண்மையென்றால் இது நிச்சய வெற்றிப்படம் என்றும் சொல்கிறார்கள். அதனாலேயே மறுபடியும் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிக்க நயன்தாரா ஒப்புக்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!