விஜய்சேதுபதியின் ரவுடி சென்டிமெண்ட் கைகொடுக்குமா?

டந்தஆண்டு விஜயசேதுபதிக்கு வெற்றிப்படமாக அமைந்தது நானும் ரவுடிதான். அதற்கு முன்னதாக ஆரஞ்சுமிட்டாய், புறம்போக்கு என்கிற பொதுவுடைமை ஆகிய படங்கள் பெயர் வாங்கிய அளவு வசூல் செய்யவில்லை என்றே சொல்லப்படுகிறது.

நானும் ரவுடிதான் படத்தில் காவல்துறை அதிகாரியின் மகனாகப் பிறந்திருந்தாலும் ரவுடியாக இருப்பதுதான் சிறப்பு என்று நினைக்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் விஜயசேதுபதி.

அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன்பின் கடந்த பிப்ரவரி 19 இல் வெளியான சேதுபதி படத்தில் அவர் கடமை தவறாத காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார். அந்தப் படமும் பெயர் வாங்கிய அளவுக்கு வசூல் இல்லை அல்லது முந்தைய படமான நானும்ரவுடிதான் அளவுக்கு வசூல் இல்லை என்று சொல்லப்படுகிறது.

அதற்கடுத்து இவ்வாரம் வெளியாகவிருக்கும் ‘காதலும் கடந்து போகும்’ படத்தில் அவர் ரவுடியாக நடித்திருப்பதாக படத்தின் முன்னோட்டம் சொல்கிறது. நானும் ரவுடிதான் படத்தில் நயன்தாரா போல இந்தப் படத்தில் மடானோசெபாஸ்டின் இருப்பதும் விஜய் சேதுபதி ரவுடியாக நடித்திருப்பதும் படத்துக்குப் பலம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

முன்பெல்லாம் ஒரு கதாநாயகன் காவல்துறை அதிகாரியாக நடித்தால் அந்தப்படம் நிச்சய வெற்றி என்பார்கள். இப்போது அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. கதாநாயகன் ரவுடியாக நடித்தால் நிச்சய வெற்றி என்கிறார்கள்.

காலம் மாறிப் போச்சு! 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!