வெளியிடப்பட்ட நேரம்: 14:41 (09/03/2016)

கடைசி தொடர்பு:15:12 (09/03/2016)

மணிரத்னம், ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியின் அடுத்த மேஜிக் ஆரம்பம்

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, சாய் பல்லவி நடிக்கும் புதிய படம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. படத்துக்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். கார்த்தி, சாய் பல்லவி நடிக்கவிருக்கும் இந்த புதிய படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளுக்காக தற்சமயம் கொடைக்கானலில் தங்கியுள்ளார் மணிரத்னம்.

படத்தில் மொத்தம் 7 பாடல்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. வழக்கம் போல் வைரமுத்து இந்தப் பாடல்களை எழுதுகிறார். மணிரத்னம் படம் என்றால், அவர் கதையை முடிக்கும் முன்பே கம்போஸிங்கை தொடங்குவது ரஹ்மானின் வழக்கம்.

இந்தப் படத்தின் பாடல் கம்போஸிங்கையும் அவர் தொடங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த வருடம் கௌதம் மேனன் , ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி, மணிரத்னம் , ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி, சூர்யாவின் 24 என ஏ.ஆர்.ரஹ்மான் சிறப்பு இசை ஆண்டாகவே இருக்கும் எனத் தெரிகிறது.

தமிழ் ரசிகர்களை மிகவும் கவர்ந்த பிரேமம் புகழ் மலர் டீச்சர் சாய் பல்லவி இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார் என்பது ரசிகர்களுக்கு டபுள் விருந்து

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்