விஜே அஞ்சனா காதல் திருமணம்! கயல் சந்திரனை கரம்பிடித்தார்

கயல் படத்தில் நாயகனாக நடித்த சந்திரன் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் அஞ்சனாவிற்கும் இன்று திருமணம் சிறப்பாக நடந்துமுடிந்தது.

பிரபுசாலமன் இயக்கத்தில் வெளியான கயல் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் சந்திரன். அஞ்சனாவை ஒரு விருது வழங்கும் விழாவில் சந்திரன் சந்தித்திருக்கிறார். அவ்விழாவில் ஏற்பட்ட பழக்கம் மூலமாக இருவரும் நண்பர்களானார்கள். பிறகு இருவரும் ட்விட்டரில் நிறைய பேசிக்கொண்டார்கள். நட்பு காதலாக மாறியது.

சந்திரன் - அஞ்சனா இருவருக்கும் கடந்த நவம்பர் 29ம் தேதி இருவீட்டார் சம்மதத்துடன் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இன்று நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் திருமணம் முடிந்தது.

பிவிபி சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வரும் 'கிரகணம்' மற்றும் பிரபுசாலமன் தயாரித்து வரும் 'பைசல்' ஆகிய படங்களிலும் சந்திரன் தற்பொழுது நடித்து வருகிறார்  என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்த்துகள் சந்திரன் - விஜே அஞ்சனா!.....

Do you like the story?

Please Appreciate the Author by clapping!