தாமாக முன்வந்து தஞ்சை விவசாயிக்கு உதவிக்கரம் நீட்டிய விஷால்

 தஞ்சை மாவட்டம், பாப்பாநாடு அருகே உள்ள சோழகன் குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாலன், மகேந்திரா கோட்டாக் நிறுவனத்தில் கடனில் டிராக்டர் வாங்கியுள்ளார். இதற்கான பெரும்பகுதி தொகையை வட்டியுடன் செலுத்தியுள்ளார்.

 

 நிலுவைத் தொகையை செலுத்தவில்லை என்பதற்காக டிராக்டர் கடன் நிறுவன ஊழியர்களும், காவல்துறையினரும் சேர்ந்து விவசாயி பாலனிடமிருந்து டிராக்டரை வலுக்கட்டாயமாக பறிமுதல் செய்துள்ளனர். டிராக்டரை பாலன் தர மறுத்ததால் காவல்துறையினரும், கடன் நிறுவன ஊழியர்களும் அவரை கடுமையாக தாக்கியுள்ளார்கள்.

இச்சம்பவத்தை அங்குள்ள பொதுமக்கள் செல்ஃபோனில் வீடியோ எடுத்து வாட்ஸ் அப்பில் பரப்பினார்கள். இது  தமிழ்நாடு முழுவதும் பரவிக்கொண்டிருக்கிறது. இந்த வீடியோவை விகடன் இணையதளத்தில் வெளியிட்டதும் காட்டுத்தீ போலப் பரவத்தொடங்கியது. இதனால் பரபரப்பு உருவானது.  விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் உருவாக்கியது.

போலீஸ்காரர்கள் விவசாயியை தாக்கிய அந்த வீடியோ பதிவு:  

இந்நிகழ்வு நடந்த அதே நாளில் பலகோடிகளை ஏமாற்றியதாகச் சொல்லப்படுகிற விஜய்மல்லய்யா நாட்டைவிட்டுப் போய்விட்டார் என்ற செய்தியும் வந்தது. இதனால் மக்கள் கொதிப்படைந்தனர்.
 
இந்நிலையில் விவசாயி தாக்கப்பட்ட நிகழ்வை அறிந்த நடிகர் விஷால், அவருக்கு உதவி செய்வதாக அறிவித்துள்ளார். அவர் தன்னுடைய டிவிட்டரில், உங்களை யாரென்று எனக்குத் தெரியாது, நீங்கள் ஒரு விவசாயி என்பதால் நான் உங்களுக்கு உதவுகிறேன் என்று சொல்லியிருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!